உ (திரைப்படம்)
உ | |
---|---|
இயக்கம் | ஆசிக் |
தயாரிப்பு | கே. மஞ்சு அண்டோ ஜோசப் |
இசை | அபிசித் ராமசாமி |
நடிப்பு | வருண் தம்பி ராமையா நேகா |
ஒளிப்பதிவு | ஜெயப்பிரகாசு |
கலையகம் | K மஞ்சு சினிமாஸ் அண்டோ ஜோசப் திரைப்பட நிறுவனம் |
வெளியீடு | பெப்ரவரி, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உ 2014 பெப்ரவரியில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இதை ஆசிக் இயக்கியுள்ளார்[1]. வருண், தம்பி ராமையா, நேகா போன்றோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் தம்பி ராமையா முதல் முறையாக முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.[2] மற்றும் வருண், மதன், சிமைல் செல்வா, காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அபிஜித் ராமசுவாமி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பெப்ரவரி 7, 2014 அன்று வெளியானது.
கதைச்சுருக்கம்
திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் திரைப்பட தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின் விரிவாக்கத்தைத் தயார் செய்யும்படி சொல்கிறார்.
கதையின் விரிவாக்கத்தை உருவாக்க தனக்கு உதவியாளர்கள் வேண்டும் என்று எண்ணுகிறார் தம்பி ராமையா. இதனால் இவருடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களை உதவியாளராக பணி புரிய அழைக்கிறார். அவர்கள் உனக்கே ஒன்றும் தெரியாது. உன்னிடம் நாங்கள் பணிபுரிவதா என்று இவரை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபம் அடையும் தம்பி ராமையா ஒருநாள் நான் படம் எடுத்து காண்பிக்கிறேன் என்று போதையில் அவர்களிடம் சவால் விட்டுச் செல்கிறார்.
தனியாகச் செல்லும் இவர் போதையில் வழியிலே விழுந்து விடுகிறார். அந்த வழியாக வரும் காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் இவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். அங்கு தம்பி ராமையா, திரைப்படத்தில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களைச் சந்திக்கிறார். இவர்களைத் தனக்கு உதவியாளர்களாகச் சேரும்படி அழைக்கிறார். இவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் பணிபுரிய சம்மதிக்கிறார்கள்.
நான்கு இளைஞர்கள் உதவியோடு தம்பி ராமையா கதையின் விரிவாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவர் சவால் விட்டுச் சென்ற இவரது நண்பர்கள், இவர் இயக்குநர் ஆகிவிடக் கூடாது என்று தம்பி ராமையா உருவாக்கும் படத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
இவர்கள் செய்யும் தடைகளைத் தாண்டி படத்தை இயக்கினாரா? அந்தப்படம் வெற்றியடைந்ததா? என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.
நடிப்பு
- தம்பி ராமையா - கணேஷ்
- வருண்
- மதன்
- சிமைல் செல்வா
- நேஹா
- சத்ய சாய்
- ராஜ்கமல்
- சௌந்தரராஜ்
- காளி வெங்கட்
- ராஜசிவா
- தீப்ஸ்
- மதுமிதா
- "சூப்பர் சிங்கர்" ஆஜித்
- ரிஷிகாந்த்
மேற்கோள்கள்
- ↑ http://cinema.maalaimalar.com/2014/02/07122345/vu-tamil-movie-review.html
- ↑ "Thambi Ramaiah in 'Vu', Vu, Thambi Ramaiah". Behindwoods.com. 2012-12-28. http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/thambi-ramaiah-in-vu-vu-thambi-ramaiah-28-12-12.html. பார்த்த நாள்: 2013-09-01.