ஈட்டியெழுபது
Jump to navigation
Jump to search
ஈட்டியெழுபது, ஒட்டக்கூத்தரால், செங்குந்தர் இனத்தைச் சார்ந்த மக்களைப் பற்றிய 70 பாடல்களின் தொகுப்பாகும். செங்குந்தர்கள் தம்முடைய பெருமையைப் பாடுமாறு ஒட்டக்கூத்தரைக் கேட்டதாகவும், அவர் அதற்கு மறுத்துவிட்டதால், செங்குந்தர்கள் தங்களுடைய தலைகளை அரிந்து சிரச்சிங்காதனம் செய்ததாகவும், அதன்பிறகே, அவர் ஈட்டியெழுபது இயற்றியதாகவும் அறிய வருகிறது. இப்பாடல்களில் செங்குந்தர் மரபினரின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
சைவ சமயத்தில் சிறந்து விளங்கிய புகழையும், முருகப் பெருமானுக்கும், செங்குந்தர்களுக்கும் இருந்த தொடர்பையும், வங்காள தேசம், யாழ்ப்பாணம் முதலியவற்றை வென்ற கதைகளையும், சோழ அரசர்களுக்கும், செங்குந்தர்களுக்கும் புலிக்கொடி சின்னமாக விளங்கியதினையும், செங்குந்தர் மரபில் சிறந்து விளங்கிய முக்கிய நபர்களைப் பற்றியும் புகழ்ந்து பாடப்பெற்ற நூலாகும்.
ஓட்டக்கூத்தர் கீழ்க்கண்ட சிற்றரசர்களைப் பற்றி ஈட்டி எழுபது நூலில் எழுதியுள்ளார்
- பழுவூர் வீரன்
- பழுவை நாராயணன்
- கச்சித்தனியன் முதலியார்
- ஒற்றியூரான்
- களந்தையரசன்
- புற்ரிடங்கொண்டான்
- கோளாந்தகன்
- புலியூர்ப் பள்ளி கொண்டான்
- பிணவன் முதலியார்
- கண்டியூரான்
- முதுகுன்றமணியன்
- தஞ்சை வேம்பன்
இவற்றையும் பார்க்க
- ↑ நாகலிங்க முனிவர், காஞ்சி (1984) (in ta). செங்குந்த பிறபந்த திரட்டு. தமிழ் நாடு: தி. நா. சபாபதி முதலியார். பக். 492 - 496. https://archive.org/details/SenguntharPrabanthaThiratu/page/n305/mode/1up.
- ↑ ஒட்டக்கூத்தர், கவிச்சர்க்கரவர்த்தி (12ஆம் நூற்றண்டு) (in தமிழ்). செங்குந்த பிறபந்த திரட்டு. சோழ நாடு: தமிழ் இணையக் கல்விக்கழகம். பக். 61 - 72. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkuh1&tag=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81#book1/62.