ஈ. த. இராசேசுவரி
Jump to navigation
Jump to search
ஈ. த. இராசேசுவரி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஈ. த. இராசேசுவரி |
---|---|
பிறந்ததிகதி | 1906 |
இறப்பு | 1955 |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | அறிவியல் தமிழறிஞர் |
ஈ. த. இராசேசுவரி (1906 - 1955) அறிவியல் தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ் இலக்கிய நூல்களில் அறிவியல் குறிப்புகளை எடுத்துக் காட்டி எழுதினார். இவர் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.[1]
தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
படைப்புகள்
- சூரியன் (நூல்), 1941
- வானக்குழி (சென்னைத் தமிழ்ச் சங்கம், 1943)
- பரமாணுப் புராணம்
- ஐன்ஸ்டைன் கண்ட காட்சி (சென்னைத் தமிழ்ச் சங்க வெளியீடு, தொகுதி 2, 1943)
- திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களில்லுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவாற்றிள்ளார்.
குறிப்புகள்
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் 1 பொருட்பட்டி அமைப்புக் குழுவினர் பட்டியலில், பெளதிகம். ரசாயணம் என்ற துணைப்பிரிவில் பக்கம் எண் xiii