இளைய அப்துல்லாஹ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இளைய அப்துல்லாஹ்
இளைய அப்துல்லாஹ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
இளைய அப்துல்லாஹ்
பிறப்புபெயர் எம். என். எம். அனெஸ்
பிறந்ததிகதி மே 21, 1968 (1968-05-21) (அகவை 56)
பிறந்தஇடம் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, இலங்கை
தேசியம் இலங்கைச் சோனகர்
அறியப்படுவது எழுத்தாளர், ஒலி, ஒளிபரப்பாளர்
பெற்றோர் மொகமட் நவாஸ், ஹஃப்சா
இணையதளம் வலைப்பதிவு

இளைய அப்துல்லாஹ் (பிறப்பு: 21 மே 1968) இலங்கை முசுலிம் எழுத்தாளரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஆவார்.[1] இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இளைய அப்துல்லாஹ் இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், புளியங்குளத்தில் ஒட்டுசுட்டான் என்ற கிராமத்தில் மொகமட் நவாஸ், ஹப்சா ஆகியோருக்குப் பிறந்தவர். 1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.[1] 1996, 97 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலி தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2000 சூலை முதல் இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.[1] தற்போது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றுகிறார்.

விருதுகள்

  • இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு 2005 (பிணம் செய்யும் தேசம், கவிதை நூலுக்காக)
  • இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ சிறீவர்த்தன விருது 2006

எழுதிய நூல்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • துப்பாக்கிகளின் காலம், சிறுகதைத் தொகுப்பு, 2004
  • பிணம் செய்யும் தேசம், கவிதைத் தொகுப்பு, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
  • அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் கட்டுரைகள்
  • கடவுளின் நிலம், கட்டுரைகள்
  • லண்டன் உங்களை வரவேற்பதில்லை, கட்டுரைகள்
  • நீரில் விளக்கெரியும் நந்திக்கடல், கட்டுரைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இளைய_அப்துல்லாஹ்&oldid=8629" இருந்து மீள்விக்கப்பட்டது