இளவெயினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பேய்மகள் இளவெயினி பேய்மகள் இள எயினி சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் புறநானூறு 11[1] ஆம் பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. அதில் இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் கொடைப் பெருமையைப் பாராட்டியுள்ளார். இவர் பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ புலவராகவும் அரசனாகவும் விளங்கியவர்.

இளவெயினியின் பாடல் சொல்லும் செய்தி:

  • மடமங்கையர் பூக்கொய்து மணல்-பாவைக்குச் சூட்டிவிட்டுத் தண்ணான் பொருநை புனலில் பாய்ந்து விளையாடும் வஞ்சி வேந்தன் இவன்.
  • இவன் பகைமன்னர் அரண் கடந்து அவர்களைப் புறங்கண்டான்.
  • இவனைப்பற்றி மறம் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன்னணிகளை வழங்கினான்.
  • பாடினி பாடும்போது அவள் குரலுக்கு இணையாக யாழ் மீட்டிய பாணனுக்கு பொன்னால் செய்த தாமரைப் பூவை விருதாக வழங்கினான்.

பாடலில் புதுமையான நடையோட்டம் காணப்படுகிறது. பாடலடிகளில் மடக்கணி காணப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இளவெயினி&oldid=18617" இருந்து மீள்விக்கப்பட்டது