இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர் கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°02′47″N 77°56′13″E / 10.046475°N 77.937005°E / 10.046475; 77.937005
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:இரும்பாடி, சோழவந்தான்
சட்டமன்றத் தொகுதி:சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:தேனி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:221 m (725 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
குளம்:கிணற்று தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி பிரம்மோற்சவம்,
மாசி மகம்,
மகா சிவராத்திரி,
அன்னாபிசேகம்,
ஆருத்ரா தரிசனம்,
திருக்கார்த்திகை

இரும்பாடி காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியின் இரும்பாடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 221 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இரும்பாடி காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°02′47″N 77°56′13″E / 10.046475°N 77.937005°E / 10.046475; 77.937005 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் கிணற்று தீர்த்தம்; தல விருட்சம் வில்வ மரம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. காசி விசுவநாதர், விசாலாட்சி, காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

பங்குனி பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை மற்றும் பிரதோசம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  2. மாலை மலர் (2021-07-07). "இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  3. "Kasi viswanathar Temple : Kasi viswanathar Kasi viswanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.

வெளி இணைப்புகள்