இராமாமிர்த செயராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமாமிர்த செயராமன்
பிறப்பு(1937-10-10)10 அக்டோபர் 1937
தமிழ் நாடு, இந்தியா
இறப்பு14 ஏப்ரல் 2019(2019-04-14) (அகவை 81)
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
துறை
  • நுண்ணுயிரி மரபியல்
பணியிடங்கள்
அறியப்படுவதுஎஸ்செரிச்சியா கோலி மரபியல்
விருதுகள்1982 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

இராமாமிர்த செயராமன் (Ramamirtha Jayaraman) (10 அக்டோபர் 1937 - 14 ஏப்ரல் 2019  ) என்பவர் இந்திய மரபியலாளர் ஆவார். இவர் பாக்டீரியாவில் குறிப்பாக எஸ்செரிச்சியா கோலியில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.[1] பாக்டீரியாவின் வரிவடிவாக்கத்த்இனை கட்டுப்படுத்துவது குறித்த இவரது ஆய்வுகள், இதில் துணை காரணிகளின் பங்களிப்பு மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரேசுடனான தொடர்புகளுக்குச் சான்றளிப்பதாக அறியப்படுகிறது.[2] இவர் பேராசிரியராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் [3] மற்றும் விஞ்ஞானியாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.[4] ஓய்வு பெற்ற பிறகு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தகைசால் அறிவியலாளராக பணியாற்றினார்.[5] இவர் மூலக்கூறு மரபியலில் ஆய்வக கையேடு ஒன்றினையும்[6] மற்றும் பல துண்டுப்பிரசுரங்களையும்[7] மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பப்மெட், மருத்துவ ஆவணங்களின் இணைய தரவகத்தில் இவரது ஆய்வுகள் சுமார் 59 பட்டியலிடப்பட்டுள்ளது.[8] அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், உயிரியல் அறிவியல் பிரிவில் 1982ஆம் ஆண்டில், மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசை விருதினை வழங்கியது.[9]

செயராமன் அவர்கள் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாளன்று காலமானார்.[10]

மேற்கோள்கள்

  1. name="Brief Profile of the Awardee">"Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2016. http://ssbprize.gov.in/Content/Detail.aspx?AID=486. பார்த்த நாள்: 28 September 2016. 
  2. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners". Council of Scientific and Industrial Research. 1999. pp. 31 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304043957/http://www.csirhrdg.res.in/ssb.pdf. பார்த்த நாள்: 28 September 2016. 
  3. D. P. Burma (2011). From Physiology and Chemistry to Biochemistry. Pearson Education India. பக். 238–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-3220-5. https://books.google.com/books?id=4CaQ3-x3LXMC&pg=PA238. 
  4. "Letter from Ramamirtha Jayaraman to James D. Watson". Cold Spring Harbor Laboratory. 2016. http://libgallery.cshl.edu/items/show/41148. பார்த்த நாள்: 30 September 2016. 
  5. R. Jayaraman (August 2008). "Joshua Lederberg's legacy to bacterial genetics". Resonance 13 (8): 716–729. doi:10.1007/s12045-008-0079-9. 
  6. Kunthala Jayaraman, R. Jayaraman (1980). Jayaraman Laboratory Manual in Molecular Genetics. John Wiley & Sons. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0852264294. 
  7. E.B. Goldberg, R. Jayaraman (1971). Transcription of Bacteriophage T4 Genome In Vivo. Cold Spring Harbor symposia on Quantitative Biology. https://www.amazon.com/TRANSCRIPTION-BACTERIOPHAGE-T4-GENOME-VIVO/dp/B00N182AHY/ref=sr_1_7?s=books&ie=UTF8&qid=1475221491&sr=1-7. 
  8. "Jayaraman R on PubMed". PubMed. 2016. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=Jayaraman%20R%5BAuthor%5D&cauthor=true&cauthor_uid=21869495. பார்த்த நாள்: 30 September 2016. 
  9. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. http://ssbprize.gov.in/Content/AwardeeList.aspx. பார்த்த நாள்: 19 September 2016. 
  10. M.Hussain Munavar and K.Dharmalingam. 2020. R. Jayaraman (1937–2019). Current Science, 118(3):488-489.
"https://tamilar.wiki/index.php?title=இராமாமிர்த_செயராமன்&oldid=25457" இருந்து மீள்விக்கப்பட்டது