இந்துக் கலைக்களஞ்சியம்
Jump to navigation
Jump to search
இந்துக் கலைக்களஞ்சியம் என்பது இலங்கையில் இந்துக் கலாசார திணைக்களத்தால் இந்து சமயம் பற்றி தமிழில் வெளியிடப்பட்டுவரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதுவரை பத்துத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2258 கட்டுரைகள் உள்ளன. இதன் முதல் தொகுதி 1990 இலும் பத்தாம் தொகுதி 2009 இலும் வெளிவந்தன. இவற்றின் ஒன்பது தொகுதிகளுக்கு சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் தொகுப்பாளாராக இருந்துள்ளார்.
உள்ளடக்கம்
இக் கலைக்களஞ்சியம் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, சமயப் பெரியவர்கள், நூல்கள், கோயில்கள், நோன்புகள் தொடர்பான விளக்கங்களைக் கொண்டிருக்கிறது.
தொகுதிகள்
தொகுதி எண் | வெளிவந்த ஆண்டு | கட்டுரைகள் எண்ணிக்கை | அகரவரிசையில் |
தொகுதி 1 | 1990 | 670 | 'அ - ஈ' |
தொகுதி 2 | 1992 | 400 | 'உ - ஔ' |
தொகுதி 3 | 1996 | 149 | 'க' |
தொகுதி 4 | 1998 | 172 | 'கா - கௌ' |
தொகுதி 5 | 2000 | 111 | 'ச - சா' |
தொகுதி 6 | 2003 | 111 | 'சி - சௌ' |
தொகுதி 7 | 2005 | 205 | 'ஞா - தி' |
தொகுதி 8 | 2006 | 160 | 'தி - தோ' |
தொகுதி 9 | 2007 | 130 | 'ந - நௌ' |
தொகுதி 10 | 2009 | 150 | 'ப - பௌ' |