இடக்கரடக்கல்
ஒரு நிகழ்ச்சி அல்லது செய்கைக்கு உரிய இயல்பான ஆனால் பலருள்ள சபையில் அல்லது சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை அடக்கி வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். "Euphemism; use of indirect or roundabout expressions to avoid indecent language; one of three takuti-vaḻakku, q.v.; தகுதிவழக்குளொன்று. (நன். 267.)" என்று தமிழகராதி கூறும்[1].
“இடக்கர்” என்றால் "சொல்லத்தகாத சொல், அநாகரிகமான சொல்" என்று பொருள்[2]; தொல்காப்பியர் இதனை அவையல் கிளவி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
இடக்கர் என்ற சொல் இடக்கு என்ற சொல்லொடு "அர்" விகுதி சேர்த்து உண்டாகிற்று.
இடக்கு என்றாலும் "1. Vulgar language. See இடக்கர்¹. 2. Cavil, captious speech; குதர்க்கம். Colloq. 3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse; முரண்செயல். குதிரை இடக் குப்பண்ணுகிறது. Colloq." என்று பொருளென்று சென்னைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது[3].
"அடக்கல்" என்றால் கூறாது அடக்குதல் என்று பொருள்.
மற்றவர்முன் கூற முடியாத நேரடியான ஆனால் அநாகரிகமான சொற்களை அடக்கி நாகரிகமான ஆனால் மறைமுகமான சொற்களைக்கொண்டு கூறுதலும் அப்படிக்கூருஞ் சொற்களையும் இடக்கரடக்கல் என்பர்.
தமிழ்மரபிலக்கணத்தில் இது தகுதிவழக்கு என்ற வகைப்பாட்டில் அடங்கும்.
சில உதாரணங்கள்
- மலம் கழிக்கப் போனான் என்பதை "கால் கழுவி வந்தான்" “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுதல்.
- சிறுநீர் கழிக்கையை ஒன்றுக்குப் போகை என்பன.
- வயிற்றுப்போக்கு ("அவனுக்கு வயிற்றாலே போகிறது")
- செத்துப் போனார்: இயற்கை எய்தினார், இறைவனடி சேர்ந்தார், உயிர் நீத்தார்