ஆர்யா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர்யா பதாய்
படிமம்:Arya Rohit.jpg
பிறப்புதிருவனந்தபுரம் , கேரளா, இந்தியா
மற்ற பெயர்கள்ஆர்யா ரோஹித், ஆர்யா
பணி
  • நடிகை
  • நகைச்சுவை நடிகை
  • தொலைக்காட்சித் தொகுப்பாளர்
  • விளம்பர நடிகை
  • தொழில் முனைவோர்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரொஹித் சுசீலன்
(தி. 2008; separated 2018)

ஆர்யா ரோஹித் (Arya Rohit) ஆர்யா என நன்கறியப்பட்ட இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் நகைச்சுவை நடிகையாகவும், விளம்பர மாதிரியாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மலையாளத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் தோன்றி வருகிறார். இவர் தொலைக்காட்சியிலும் விளம்பரத் துறையிலும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் ஏசியாநெட்டில் ஒளிபரப்பான பதாய் பங்களா என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகராக அறியப்படுகிறார். பின்னர் இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார். மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்தார். மலையாள உண்மைநிலை நிகழ்ச்சிகளான பிக் பாஸின் இரண்டாவது பருவத்தில் பங்கேற்றார்.

ஆரம்ப வாழ்க்கை

ஆர்யா, இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். [1] இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மேற்கத்திய, திரை நடனம் மற்றும் அரை பாரம்பரிய பாணிகளில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞராவார்.[2]

தொழில்

ஆர்யா, தனது மேல்நிலைக் கல்வியை படிக்கும் போது நடிகையாக அறிமுகமானார், அம்ருதா தொலைக்காட்சியில் ஆஃபீசர் என்ற தொலைக்காட்சி தொடரில் தோன்றுவதற்கான வாய்ப்பை பெற்றார். பின்னர், இவர் இரண்டு தொடர்களில் தோன்றினார். அதன் பிறகு திருமணம் செய்துகொண்டார். இவரது மைத்துனி கல்பனா சுசீலன் ஒரு விளம்பர நடிகையாக இருந்ததால் இவரை அத் தொழிலில் வாய்ப்புத் தேட தூண்டியது. சென்னை சில்க்ஸ், செம்மனூர் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட தொழில்துறையில் முன்னணி வாடிக்கையாளர்களுக்கான விளம்பரங்களில் ஒர்ரு வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் 'மகாராணி' (2009-2011) என்ற தமிழ் நாடகத் தொடரில் தோன்றினார். இது, மலையாளத் தொடரான என்டே மானசபுத்திரியின் மறு ஆக்கமாகும். இதில் இவரது மைத்துனி அர்ச்சனா சுசீலன் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் குழந்தை பிறப்புக்காக விலகியிருந்தார். பின்னர், மோகக்கடல், அச்சன்டே மக்கள் , ஆர்த்ரம் போன்ற தொடர்களில் நடித்தார்.[2]

தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஆசியநெட்டில் ஒளிப்பரப்பான தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கான ஸ்டார்ஸ் என்ற உண்மைநிலை நிகழ்ச்சி தொலைக்காட்சித் தொடரில் போட்டியிட்ட பிறகு இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இந்த் தொடரின் அத்தியாயம் ஒன்றில் நான் கந்தர்வன் படத்தின் ஒரு காட்சியை நையாண்டியாக நடித்தது தொலைக்காட்சி நிறுவனத்தால் பாராட்டப்பட்டது. மேலும், புதிதாக தொடங்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான 'பதாய் பங்களாவின் (2013 - 2018) தயாரிப்பாளர் டயானா சில்வெஸ்டருக்கு இவரது பெயரை பரிந்துரைக்கப்பட்டார். இது ஒரு நகைச்சுவை நடிகையாகவும் இவரது வாழ்க்கையில் ஒரு வெற்றியாக இருந்தது. இத்தொடரில் இவர் "ஆர்யா" என்ற பாத்திரத்தைச் சித்தரித்தார்.[2] பதாய் பங்களாவில் இவர் மேடை நிகழ்ச்சியையும், குறிப்பாக, ஏசியாநெட்டில் "ஸ்த்ரீதானம்" என்ற தொடரையும் செய்தார். அதில் இவர் கராத்தேயில் கருப்பு பட்டையோடு தைரியமான, வெளிப்படையான மருமகளான பூஜாவாக நடித்தார். இந்த பாத்திரம் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.[1]

பின்னர், தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கினார். மேலும் பல மலையாளப் படங்களிலும் நடித்தார்.[3] 2020 ஆம் ஆண்டில், மலையாள உண்மைநிலை நிகழ்ச்சி தொடரான பிக் பாஸின் இரண்டாவது பருவத்தில் இவர் போட்டியிட்டார். இந்நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் ஏசியாநெட்டில் தொகுத்து வழங்கினார்.[4]

குடும்பம்

இவர் தகவல் தொழில்நுட்ப் பொறியாளர் ரோஹித் சுசீலனை மணந்தார். இவர்களுக்கு ரோயா என்ற மகள் உள்ளார். ரோஹித் தொலைக்காட்சி நடிகை அர்ச்சனா சுசீலனின் சகோதரர் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில், இவர் வழுத்தக்காடு என்ற இடத்தில் 'ஆரோயா' என்ற நவநாகரீக ஆடை, ஆடம்பரப் பொருள்களை விற்கும் சிறிய கடையைத் திறந்தார்.[3] சனவரி 2019 இல், ஆர்யா தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியே வசிப்பதாக வெளிப்படுத்தினார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்யா_(நடிகை)&oldid=23615" இருந்து மீள்விக்கப்பட்டது