அழுக்கு சாமியார்
அழுக்கு சாமியார் என்பவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதிக்கு அருகே இருக்கும் வேட்டைக்காரன்புதூரில் வாழ்ந்த ஒரு சித்தராவார்.[1] இவருடைய ஜீவ சமாதியை இப்போது கோவிலாக்கி வழிபடுகின்றனர். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. இவருடைய பிறப்பு, இயற்பெயர், ஊர் ஆகியவைப் பற்றி பக்தர்களுக்குத் தெரியவில்லை.
பெயர்க் காரணம்
இவர் எப்போது குளிக்கிறார் என்பதை அறியாத மக்கள், இவரை அழுக்குச் சாமியார் என்று அழைக்க அதுவே இவருடைய பெயராக நிலைத்துவிட்டது.
ஜீவ சமாதி
இவர் 1918ம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் வேட்டைக்காரன் புதூரிலேயே ஓரிடத்தினைத் தேர்ந்தெடுத்து ஜீவ சமாதியானார். அவருடைய ஜீவ சமாதி தற்போது அழுக்கு சாமியார் கோவில் அமைந்துள்ளது.
குரு பூசை
அழுக்கு சாமியார் ஜீவ சாமியான கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திர தினத்தன்று அவருக்கு குரு பூசை கொண்டாடப் படுகிறது. இக்குரு பூசையில் பாண்டிச்சேரியின் முதல்வர் ந. ரங்கசாமி கலந்து கொண்டுள்ளார்.[2] இந்நாளில் அழுக்கு சாமியாருக்குப் பிடித்த கம்பஞ் கஞ்சியை பக்தர்களுக்குத் தருகிறார்கள்.[3]
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும் - ஏ. எம். ராஜகோபாலன் குமுதம் 16-03-2015 பக்கம் 84
- ↑ "பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சாமியார் கோவிலில் ந. ரங்கசாமி சாமி தரிசனம் மாலைமலர் புதன்கிழமை, நவம்பர் 20". Archived from the original on 2013-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
- ↑ பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும் - ஏ. எம். ராஜகோபாலன் குமுதம் 16-03-2015 பக்கம் 87
http://www.dinamalar.com/news_detail.asp?id=132705
வெளி இணைப்புகள்
http://tamil.oneindia.com/news/2008/02/18/tn-puducherry-cm-rangasamis-secret-visit.html