அலெக்சாண்டர் அன்ஸ்ட்ரூதர் (நீதியரசர்)
சர் அலெக்சாண்டர் அன்ஸ்ட்ரூதர் (10 செப்டம்பர் 1769 - 16 சூலை 1819) என்பவர் இந்திய துணைக்கண்டத்தை, கிழக்கிந்திய நிறுவனம் ஆட்சிபுரிந்த காலத்தில் மதராஸ் மற்றும் மும்பை மாகாணங்களில் நீதிபதியாக இருந்தவராவார்.
வாழ்க்கை
அன்ஸ்ட்ரூதர் சர் ராபர்ட் அன்ஸ்ட்ரூதர் என்வரின் இரண்டாவது மகனாவார். இவர் ஏறக்குறைய 1792 மற்றும் 1797 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தின் நீதிமன்றம் மற்றும் பிரபுக்கள் அவை முடிவு செய்த வழக்குகளை, மேற்கோள் நோக்கத்திற்காக பதிப்பித்தார். இவை 1796 மற்றும் 1797 இல் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன, மேலும் 1817 இல் இவை இரண்டாவதாக மறுபதிப்பு செய்யப்பட்டன.
அன்ஸ்ட்ரூதர் இந்தியாவிற்கு 1798 இல் வந்தார். இவர் 1803 இல் சென்னை அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 1812 மார்ச்சில் ஜான் ஹென்றி நியூபோல்ட்க்கு அடுத்து பம்பாய் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவுக்குச் சென்றபோது ஒளி, வெப்பம் மற்றும் மின்சாரம் குறித்த ஒரு சிறிய படைப்பை எழுதினார்.
அவர் மொரிசியசில் 1819 இல் இறந்தார்.