அறிவியல் நகர்
Jump to navigation
Jump to search
அறிவியல் நகர் (Ariviyal Nagar) இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்நகரம் 2000 ஆம் ஆண்டளவில் சு. ப. தமிழ்ச்செல்வன், சுஜந்தன், பூவண்ணன், தமிழேந்தி ,கருணாரத்தினம் அடிகள் ஆகியோரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]
இந்த ஊர் பொன்னகர் என்ற ஊருக்கும் ஏ9 வீதிக்கும் இடையில் முறிகண்டிக்கும் 55-ஆம் கட்டை கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. அறிவியல் நகர் தொடருந்து நிலையம் 2019 மார்ச் 14 இல் திறக்கப்பட்டது.[1]
இங்குள்ள கல்வி நிலையங்கள்
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- விவசாய பீடம்[2]
- தொழில்நுட்ப பீடம்
- இலங்கை-செருமன் பயிற்சிக் கழகம்