அறநெறிச்சாரம்
Jump to navigation
Jump to search
அறநெறிச்சாரம் என்பது ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன.
பாடல் - எடுத்துக்காட்டு
- செருக்கு எட்டும் பயன்படாது
அறிவுடைமை, மீக்கூற்றம், ஆன குலனே,
உறுவலி, நல்தவம், ஓங்கிய செல்வம்
பொறிவனப்பில், எம்போல்வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்(பு) இல [1]
- தாய்
காலொடு கைஅமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்து
பாலொடு நெய்பெய்யும் தாய்அனையர் [2]
- உயிருக்கும் கூத்தாடிக்கும் சிலேடை
அங்கம் அறஆடி அங்கே படம்மறைத்து
அங்கே ஒருவண்ணம் கோடலால் - என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
நுழன்றாடு தோற்றப் பொலிவு [3]
மேற்கோள்கள்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்
- நீதிநூறு கொத்து,இரண்டாம் பாகம், சென்னை வள்ளுவர் பண்ணை வெளியீடு, 2003
அடிக்குறிப்புகள்
- ↑ பாடல் 65
- ↑ சான்றோர் - பாடல் 96
- ↑
பாடல் 121
- கூத்தாடி உடலுறுப்புகள் நோகுப்படி ஆடுவான். திரையில் மறைந்துகொள்வான். வண்ணம் பூசிக்கொண்டு வேறொருவனாகத் தோன்றுவான்.
- உயிர் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் இருக்கும். உடல் என்னும் படத்துக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும். எண்ணம் மாறுவதாலே ஒருவன் வெவ்வேறு வண்ணத்தனாக இருப்பான்.
- கூத்தாடி உடலுறுப்புகள் நோகுப்படி ஆடுவான். திரையில் மறைந்துகொள்வான். வண்ணம் பூசிக்கொண்டு வேறொருவனாகத் தோன்றுவான்.