அர்தபல்லபா மொகந்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அர்தபல்லபா மொகந்தி
இயற்பெயர் அர்தபல்லபா மொகந்தி
Artaballabha Mohanty
பிறந்ததிகதி 30 July 1887 (1887-07-30)
பிறந்தஇடம் கட்டக், இந்தியா
இறப்பு 30 July 1969
கல்வி நிலையம் இரேவன்சா கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகம்
வகை இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்மசிறீ

அர்தபல்லபா மொகந்தி (Artaballabha Mohanty)ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்[1] மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக் நகரில் மொகந்தி பிறந்தார். ஒரியா இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கட்டாக் நகரிலுள்ள இரேவன்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஓரியா இலக்கியத்தை மறுவடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த இலக்கிய நிறுவனமான பிராச்சி சமிதியை நிறுவினார். [2]

மொகந்தியின் பணிகளை சிறப்பிக்கும் விதமாக இந்திய அரசு 1960 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அர்தபல்லபா_மொகந்தி&oldid=18717" இருந்து மீள்விக்கப்பட்டது