அருணாசல சீனிவாசன்
அருணாசல சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | பிரித்தானிய இந்தியா சென்னை மாகாணம் | 13 சூலை 1909
இறப்பு | 20 சூலை 1996 இந்தியா | (அகவை 87)
பணி | உணவு தொழில்நுட்பவியலாளர் |
அறியப்படுவது | உணவு தொழில்நுட்பம் ஊட்டச்சத்து அறிவியல் |
விருதுகள் | பத்ம பூசண் |
அருணாசல சீனிவாசன் (Arunachala Sreenivasan, 1909-1996) என்பவர் ஒரு இந்திய உணவு தொழில்நுட்பவியலாளர், ஊட்டச்சத்து அறிவியலாளர் ஆவார். இவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.[1] 1909 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு) பிறந்து 1936 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் (1959-64), உயிர் வேதியியல் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார். மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உணவு தொழில்நுட்பப் பிரிவு, (1964-71), அணுசக்தித் துறையின் ஆலோசகர், மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் எமரிட்டஸ் அறிவியலாளராக (1971-73) இருந்தார். 1975 இல் டாடா நினைவு மையத்தில் இருந்து ஓய்வு பெறார். மேலும் இவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆராய்ச்சி முடிவுகள் [2] [3] பல கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. [4] அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு, 1974 ஆம் ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை அவருக்கு வழங்கியது. [5] சீனிவாசன் 87. வயதில் 1996 சூலை 20 அன்று இறந்தார். [1]
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Deceased Fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.org.in/deceaseddetail.php?id=N500794.
- ↑ Arunachala. Sreenivasan; R. M. Vaidya (1948). "Determination of Carotene in Plant Materials". Anal. Chem. 20 (8): 720–722. doi:10.1021/ac60020a008.
- ↑ S. M. Patel; Arunachala. Sreenivasan (1948). "Selenium as Catalyst in Kjeldahl Digestions". Anal. Chem. 20 (1): 63–65. doi:10.1021/ac60013a015.
- ↑ Medha S. Rajwade; Surendra S. Katyare; Prema Fatterpaker; Arunachala Sreenivasan (November 1975). "Regulation of mitochondrial protein turnover by thyroid hormone(s)". Biochem. J. 152 (2): 379–387. doi:10.1042/bj1520379. பப்மெட்:177002.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.