அப்துல் ஹமீத் கான்
அப்துல் அமீத் கான் | |
---|---|
பிறப்பு | 1892 |
இறப்பு | 1965 (அகவை 70–71) |
தேசியம் | இந்தியன் |
பணி | அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1927 முதல் 1951 வரை |
அப்துல் அமீத் கான் (Abdul Hameed Khan) (நவம்பர் 1892-1965) இவர் ஓர் இந்திய வணிகரும், அரசியல்வாதியுமாவார். இவர் சென்னை மாகாண சட்ட மேலவை, சென்னை மாகாண சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், கர்நாடக மாநிலத்தின் திவானாகவும் பணியாற்றினார். 1935-36ல் சென்னையின் முதல் முஸ்லிம் மேயராக பணியாற்றினார். இவர் சென்னையில் உள்ள அமீர் மகாலில் வசித்து வந்தார்.
துவக்க வாழ்க்கை
இவர் ஒரு பணக்கார வணிகரும், கொடைவள்ளலுமான தாதா கானுக்கு 1894 இல் பிறந்தார். இவரது மூதாதையர்கள் ஆப்கானித்தானில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே இங்கு குடிபெயர்ந்தனர்.
கல்வி
சென்னை கிறித்தவ கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
அரசியல் வாழ்க்கை
- 1918 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் இயக்கத்தில் பணியாற்றி உதவி செயலாளர் ஆனார்.
- 1919 ஆண்டு சென்னை மாகாணத்தில் நடந்த கிலாபத் இயக்கத்தில் பங்கேற்று மாகாண கிலாபத் அமைப்பின் பொறுப்பாளர் ஆனார்.
- 1919 முதல் 1924 வரை இராஜகோபாலாச்சாரியாருடன் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பணியாற்றினார்.
- 1921 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த இவர், சுயாட்சிக் கட்சியில் சேர காங்கிரசை விட்டு வெளியேறி 1927 இல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1927 முதல் 1936 வரை சபையில் பணியாற்றிய இவர் சென்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 இல் சட்டமன்றம் 1951 வரை பணியாற்றிணார்.
தமிழ்நாடு காங்கிரசு குழு செயலாளாராகவும், அகில இந்திய காங்கிரசு குழுவிலும் பணியாற்றிய இவர், 1937 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி சென்னை மாகாண முஸ்லிம் லீக்கில் இணைந்தார். இந்தியப் பிரிவினைக்கும் ஆதரவளித்தார். 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினார்.
திவான்
இவர் கர்நாடக மாநிலத்தின் திவானாகப் பணியாற்றினார். டெக்கான் டைம்ஸ் என்ற நாளிதழின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார்.
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
1924 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் உறுப்பினர் ஆனார். தொடர்ந்து 1934 - 1935 ஆண்டில் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ஆனார்.[1]
சென்னை மாகாண மேலவை
சென்னை மாகாண சட்ட மேலவைக்கு 1950 ஆம் ஆண்டு ஊரக முஸ்லிம் பிரதிநித்துவத்தின் அடிப்படையில் கர்நூல் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
மேலும் பார்க்க
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்)களின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ சு. முத்தையா, தொகுப்பாசிரியர் (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. 1. Palaniappa Brothers. பக். 153.
- ↑ [1] பக்கம் 31 (இரண்டாவது) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் கையேடு]