அன்பே தெய்வம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பே தெய்வம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்புஆர். நாகேந்திர ராவ்
கதைஆர். என். ஜெயகோபால்
திரைக்கதைடி. யு. பதி
இசைஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, விஜய பாஸ்கர்
நடிப்புஆர். நாகேந்திர ராவ்
எம். கே. ராதா
கே. சாரங்கபாணி
ஸ்ரீரஞ்சனி ஜூனியர்
கே. எஸ். அங்கமுத்து
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஆர். என். கே. பிரசாத்
கலையகம்ஆர். என். ஆர். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 6, 1957 (1957-12-06)(இந்தியா) [1]
ஓட்டம்15,998 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே தெய்வம் 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஆர். நாகேந்திர ராவ், எம். கே. ராதா, கே. சாரங்கபாணி, ஸ்ரீரஞ்சனி ஜூனியர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

திரைக்கதை

மோகன் ராவ் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். அவரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு கணவனும், மனைவியும் அவர்களது சிறுமியான உமா என்ற மகளும் வாழ்கின்றனர். அந்தக் கணவன் ஒரு தீயவன்.
அவன் மோகன் ராவ் தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளயடிக்கத் திட்டமிடுகிறான். அவன் தனது திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஒரு மனிதனைக் கொன்றுவிடுகிறான். கணவனைக் காப்பாற்றுவதாக எண்ணி மனைவி தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொடுக்கிறாள். ஆனால் இருவரும் தண்டனை பெற்று சிறை செல்கின்றனர்.
அனாதரவான நிலையில் விடப்பட்ட சிறுமி உமாவை மோகன் ராவ் தம்பதி வளர்க்கின்றனர். உமா வளர்ந்து இளம் பெண் பருவத்தை அடைகிறாள். அவள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அந்த இளைஞன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன்.
இச்சமயத்தில் கணவனும் மனைவியும் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். தனது மகள் வசதியாக இருப்பதையும் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையும் தந்தை அறிகிறான்.
அவன் மோகன் ராவை மிரட்டிப் பணம் பறிக்க முயலுகிறான். உமாவுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. கல்யாணத்தின் போது தகப்பன் கலாட்டா செய்து திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறான்.
எவ்வாறு அவனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்து திருமணத்தை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

[2]

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பாளர் & இயக்குநர்: ஆர். நாகேந்திர ராவ்
  • கதை: ஆர். என். ஜெயகோபால்
  • வசனம்: எம். யு. பதி
  • ஒளிப்பதிவு: ஆர். என். கே. பிரசாத்
  • இசை: ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, விஜய பாஸ்கர்
  • நடன ஆசிரியர்: தங்கப்பன்
  • கலையகம்: கோல்டன்[2]
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
  • பாடல்கள்: சுந்தரக்கண்ணன்
  • நிழற்படங்கள்: ஈஸ்வர பாபு[1]

தயாரிப்பு

இப்படத்தை ஆர். என். பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் ஆர். நாகேந்திர ராவ் தயாரித்து, இயக்கி, நாயகராகவும் நடித்தார். இப்படத்தின் கதையை ஆர். நாகேந்திர ராவின் மகனான ஆர். என். ஜெயகோபால் எழுதினார். ஆர். நாகேந்திர ராவின் மற்றொரு மகனான ஆர். என். பிரசாத் ஒளிப்பதிவு செய்தார்.[3]

பாடல்

இப்படத்திற்கு எச். ஆர். பத்மநாப சாஸ்திரி மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் இசையமைத்தனர். பாடல் வரிகளை சுந்தர கண்ணன் எழுதினார்.[3]

பாடல் பாடகர் நீளம்
அத்தானை எங்கேயும் பாத்தீங்களா சீர்காழி கோவிந்தராஜன், பி. லீலா 06:13
இன்பமெல்லாம் தந்தருளும் பி. சுசீலா 02:41
வாராயோ.. நித்திரா தேவி, எந்தன் வண்ணச் சிலையைத் தூங்கச் செய்யாயோ பி. லீலா -
அன்பே தெய்வ மயம் இவ்வுலகில் பி. சுசீலா -

வரவேற்பு

அன்பே தெய்வம் 6 திசம்பர் 1957 அன்று வெளியானது.[4] அதே நாளில், இந்தியன் எக்சுபிரசு இதை "தொழில்நுட்பத்தில் குறைபாடற்ற படம்" என்றும் இசையைப் பாராட்டியது.[5] இருந்த போதிலும் படம் வெற்றி பெறவில்லை.

சான்றாதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004) (in தமிழ்). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2016-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121154131/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails21.asp. பார்த்த நாள்: 2016-10-27. 
  2. 2.0 2.1 2.2 ராண்டார் கை (2 செப்டெம்பர் 2012). "Anbey Deivam 1957". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/anbey-deivam-1957/article3849167.ece. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2016. 
  3. 3.0 3.1 "அன்பே தெய்வம்: அப்பா நாயகன் மகன் கதாசிரியர் இன்னொரு மகன் ஒளிப்பதிவாளர்!". தி இந்து. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1163920-anbe-deivam-movie-analysis.html. பார்த்த நாள்: 5 திசம்பர் 2023. 
  4. "1957 – அன்பே தெய்வம் – ஆர்.என்.ஆர்.பிக்சர்ஸ்" (in ta) இம் மூலத்தில் இருந்து 21 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161121154131/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails21.asp. 
  5. "Anbe Deivam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 6 December 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19571206&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்பே_தெய்வம்&oldid=30384" இருந்து மீள்விக்கப்பட்டது