அன்புராஜ் கி. வீரமணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அன்புராஜ், திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலளராக, அதன் தலைவர் கி. வீரமணியால் நியமிக்கப்பட்டவர். அன்புராஜ் கி. வீரமணியின் சொந்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புராஜ் சென்னையில் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை சூரியா டிரேடிங் எனும் நிறுவனம் மூலம் விற்பனை செய்கிறார்.[1] மேலும் இவர் கெவின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இத்துடன் அன்புராஜ் பெரியார், மணியம்மை, நாகம்மை பெயரிலான 19 அறக்கட்டளைகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.

திராவிடர் கழக அறக்கட்டளைகளில் அன்புராஜ் வகிக்கும் பதவிகள்

  1. ஆட்சிக் குழு உறுப்பினர் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்
  2. ஆலோசகர் - பெரியார் மருந்துகள் அறிவியல் கல்லூரி (Periyar College of Pharmaceutical Sciences) - திருச்சிராப்பள்ளி
  3. ஆலோசகர் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்
  4. நிர்வாகக் குழு உறுப்பினர் - பெரியார் மேலாண்மை & கணினிக் கல்லூரி, புது தில்லி
  5. தாளாளர் - பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சிராப்பள்ளி
  6. தாளாளர் - நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சிராப்பள்ளி
  7. தாளாளர் - பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மற்றும் மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி
  8. தாளாளர் - பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி
  9. தாளாளர் - பெரியார் மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்
  10. தாளாளர் - பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி, வெட்டிக்காடு, திருவோணம் ஊராட்சி ஒன்றியம், தஞ்சாவூர்
  11. தாளாளர் - பெரியார் துவக்கப்பள்ளி, திருச்சிராப்பள்ளி
  12. தலைமை இயக்குநர் - விடுதலை (இதழ்)
  13. தலைமை ஒருங்கிணைப்பாளர் - சென்னை புத்தகச் சங்கமம்[2]
  14. புரவலர் - பெரியார் வீர விளையாட்டுக் கழகம்
  15. ஒருங்கிணைப்பாளர் - நாகம்மை குழந்தைகள் இல்லம்
  16. ஒருங்கிணைப்பாளர் - கைவல்ய சுவாமி முதியோர் காப்பகம்
  17. உறுப்பினர் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்
  18. செயலாளர் - பெரியார் பொது அறக்கட்டளை
  19. ஆலோசனைக் குழு உறுப்பினர்:அ) பெரியார் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணி பயிற்சி மையம், சென்னை. ஆ) பெரியார் மணியம்மை மருத்துவமனைகள் - திருச்சி, தஞ்சாவூர், சோழங்கநல்லூர் மற்றும் சேலம். இ) பெரியார் சுயமரியாதை திருமண மையம், சென்னை. ஈ) பெரியார் புரம், வல்லம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அன்புராஜ்_கி._வீரமணி&oldid=10241" இருந்து மீள்விக்கப்பட்டது