அனிதா குப்புசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனிதா குப்புசாமி
இசை வடிவங்கள்நாட்டுப்புறப் பாடகர், கருநாடக இசை
தொழில்(கள்)பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகி
இணையதளம்pushpavanamkuppusamy.com

அனிதா குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து கிராமியப்பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பெங்களூரில் பிறந்த அனிதா மேட்டுப்பாளையத்தில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். கோயம்புத்தூர் அவிநாசிலிங்கம் கல்லூரியில் இசையில் இளநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து சென்னையிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கருநாடக இசையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[1]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது உடன் பயின்ற மாணவரான புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்தார், இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியிடம் இருந்து தமிழ் நாட்டுப்புறக் கலையைக் கற்றுக் கொண்டார்.[2] கலைமாமணி விருது பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்..[2]

இசை வாழ்க்கை

தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா, கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், தனது பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சினை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய சமூக விழிப்புணர்வுகளை இணைத்து பாடி வருகிறார்.

முன்னதாக, அனிதாவின் நோக்கமானது ஒரு முக்கிய பின்னணிப் பாடகியாக ஆக வேண்டும் என்பதாக இருந்தது. எனினும் இசை நிகழ்ச்சிகளுக்காக அவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டதால் பின்னணி பாடல்களில் கவனம் செலுத்த முடியவில்லை.[3]

பாடிய பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்

  • மண்ணு மணக்குது
  • மண் வாசம்
  • மண் ஓசை
  • கரிசல் மண்
  • சோளம் விதைக்கையிலே
  • மேகம் கருக்குதடி
  • களத்து மேடு
  • ஊர்க்குருவி
  • கிராமத்து கீதம்
  • காட்டுமல்லி
  • அடியாத்தி டான்சு டான்சு
  • ஒத்தையடிப் பாதையிலே
  • தஞ்சாவூரு மண்ணமடுத்து
  • நாட்டுப்புற மணம்

பாடிய திரைப்படப் பாடல்கள்

திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் உடன் பாடியவர்(கள்)
வள்ளி வரப் போறா "பொண்ணு ரொம்ப ஜோருதான்" கே. எஸ். மணி ஒலி புஷ்பவனம் குப்புசாமி
அரசியல் "அரசியல் அரசியல்" வித்யாசாகர் புஷ்பவனம் குப்புசாமி
கரிசக்காட்டு பூவே "குச்சனூரு" இளையராஜா புஷ்பவனம் குப்புசாமி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அனிதா_குப்புசாமி&oldid=27774" இருந்து மீள்விக்கப்பட்டது