அண்ணாமலை ரெட்டியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை ரெட்டியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அண்ணாமலை ரெட்டியார்
பிறந்ததிகதி 1865
இறப்பு 1891


அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.[1]

பிறப்பும் கல்வியும்

அண்ணாமலை ரெட்டியார் தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார்.திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார்.

பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று அங்கு குறுநிலத் தலைவராக இருந்த இருதயாலய மருத்தப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.

காவடிச்சிந்து

காவடிச்சிந்து நாட்டுப்புறப் பாடல் வகைகளில் ஒன்று. பல கண்ணிகளாக தொடுத்துக்கொண்டே பாடிச்செல்வதற்கு சிந்து என்று பெயர்.காவடிச்சிந்து நடனமாடுவதற்குரிய சந்தம் கொண்டது. அண்ணாமலை ரெட்டியார் அந்த வடிவை எடுத்துக்கொண்டு காவடி கட்டி ஆடுபவர்களுக்காக எழுதிய காவடிச்சிந்து பாடல்களை ஊற்றுமலை அரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார்.

காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலை ரெட்டியார் ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி ஐந்து கவிகள் பாடியுள்ளார். ள் தொகுக்கப்பட்டு நூலாயின. அந்நூல் மக்களிடமும் புலவர் நடுவிலும் புகழுடன் இருந்தது. செவ்வியல் நடையும் நாட்டுப்புறச் சந்தமும் கொண்டது. அவ்வகையில் தமிழிலக்கியத்திற்கு புதிய திறப்பு ஒன்றை அளித்தது. பின்னாளில் சி.சுப்ரமணிய பாரதி போன்றவர்கள் அந்த மரபைப் பின்தொடர்ந்தனர்.

சமகால இலக்கிய நண்பர்கள்

பாடல் நடை

கட்டளைக் கலிப்பா

மாகக் காரிகை கும்மக வானுடன்
மருவுங் காரிகை போலெழில் வாயந்தவன்
மோகக்காரிகை மிஞ்சு மயல்கொண்டான்
மொழியுங் காரிகை மெத்தயிற் சேர்குவாய்
பாகக் காரிகையாற் செய்த காரிகை
பார்த்துப் பாடிய பாவாணர் தம்மிடி
போகக் காரிகை என்னத் தனந்தரும்
போச னேசுந் தரதாசு பூமனே

காவடிச்சிந்து

சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.

மறைவு

தன் இருபத்தியாறாவது வயதில் பால்வினை நோய்க்கு ஆளாகி தன் முப்பதாவது வயதில் 1891-ல் காலமானார். அண்ணாமலை ரெட்டியாருக்கு கரிவலம்வந்தநல்லூர், சென்னிகுளம் கிராமத்தில் மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நூல் பட்டியல்

  • காவடிச்சிந்து
  • வீரையந்தாதி
  • வீரைத் தலபுராணம்
  • கோமதி அந்தாதி
  • வீரை நவநீத கிருட்டிணபிள்ளைத்தமிழ்
  • சங்கரநாராயணர் கோயில் திரிபந்தாதி
  • கருவை மும்மணிக்கோவை

இணைப்புகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அண்ணாமலை_ரெட்டியார்&oldid=8261" இருந்து மீள்விக்கப்பட்டது