அ. அய்யூப்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. அய்யூப் (பிறப்பு: மே 13 1947) இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், மயிலாடுதுறையிலிருந்து வெளி வந்த ’நம்ம ஊரு செய்தி (சிற்றிதழ்)’ மாத இதழின் ஆசிரியர். அனைத்திந்திய மாணிக்க வியாபாரிகள் சங்கத் தலைவர். தற்போது தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரில் வசித்து வருகிறார். இலக்கிய ஆர்வம் நிரம்பியவர்.

வணிகம்

ஆங்காங் நகரில் நவமணிகள் வியாபாரியாக வாழ்க்கையைத் துவங்கியவர். தாய்லாந்து, திருச்சி, கொழும்பு போன்ற இடங்களில் தனது நிறுவனத்தின் கிளைகளை நடத்தி வருகிறார். திருச்சி நகரில் ஆண்டு தோறும் நவமணிகள் கண்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • ஆசிரியர் பேசுகிறார்[1]
  • இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா[2]
  • கதை கேளு பாப்பா கதை கேளு[3]
  • கொறிக்க சுவைக்க[3]
  • சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்[3]
  • சிந்திப்போம் சிறகடிப்போம்[3]
  • நம்ம ஊரு செய்தி[3]
  • நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி
  • நவமணிகள் [4]
  • மயிலாடுதுறை வரலாறு[5]
  • விழா நடத்துவது எப்படி?[3]
  • வீடு கட்டப் பணம் வேண்டுமா?
  • வெளிநாட்டுக்குப் போவது எப்படி?

பெற்ற கௌரவங்களும் விருதுகளும்

அமெரிக்கவிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அ._அய்யூப்&oldid=4539" இருந்து மீள்விக்கப்பட்டது