மரகதமணி
| எம். எம். கீரவாணி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | கொடுரி மரகதமணி கீரவாணி |
| பிற பெயர்கள் | மரகதமணி (கோலிவுட்) எம். எம். கீரம் (பாலிவுட்) |
| பிறப்பு | 4 சூலை 1961 கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா |
| பிறப்பிடம் | ஆந்திர பிரதேஷ், இந்தியா |
| இசை வடிவங்கள் | திரைப்பட இசை, உலக இசை |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் |
| இசைத்துறையில் | 1989–தற்போது |
கொடுரி மரகதமணி கீரவாணி, (M. M. Keeravani) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா ஆகியோரால் பாடப்பெற்றது.[1] 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.[2] இவரது இசையமைப்பில் வெளிவந்த இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது மற்றும் அகாதமி விருதினை வென்றது.[3][4]
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
படங்கள்
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
விருதுகள்
கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமையா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu
- ↑ "The man in demand | Deccan Chronicle". Archived from the original on 2013-02-15. Retrieved 2016-06-09.
- ↑ "'கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்". www.dinamalar.com. தினமலர். 12 ஜனவரி 2023. Retrieved 13 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ "நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது". www.dinamalar.com. தினமலர். 13 மார்ச் 2023. Retrieved 13 மார்ச் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help)