ஹட்டா
ஹட்டா (Haḍḍa) (பஷ்தூ: هډه) ஆப்கானித்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நங்கர்கர் மாகாணத்தின் காந்தரப் பிரதேசத்தின் ஜலாலாபாத் நகரத்திற்கு தெற்கே, பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கிரேக்க - பௌத்தத் தொல்லியல் களமாகும்.
பின்னணி
ஹட்டா பகுதியில் 1930 மற்றும் 1970களில் அகழ்வாராய்ச்சி செய்கையில், கிபி 1 - 5ம் நூற்றாண்டு காலத்திய, களிமண் மற்றும் சுண்ணாம்புச் சாந்தில், இந்தோ - கிரேக்க கலைநயத்தில் [1], வடிக்கப்பட்ட 23,000 சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. இத்தொல்பொருட்களில் கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர்களான வச்ரபானி போன்றோர்களின் சிற்பங்களும் அடக்கம்.
இத்தொல்பொருட்களில் பல கிரேக்க ஹெலெனிய - பௌத்த நாகரீகக் கலைநயத்துடன் கூடியது. [2] ஹட்டா தொல்லியல் களத்தில் கிடைத்த அரிய கிரேக்க - பௌத்த சிற்பங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரிசு நகரத்தின் குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3]
சமசுகிருதம் மொழியில் ஹட்டா என்பதற்கு எலும்பு அல்லது எலும்புகள் குவித்த இடம் எனப் பொருளாகும்.
பௌத்தக் குறிப்பேடுகள்
கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய, காந்தாரி எழுத்துமுறையில் மட்பாண்டங்களில் எழுதப்பட்ட சர்வாஸ்திவாத பௌத்த சமயச் சாத்திரங்களின் குறிப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கையெழுத்துப் பிரதிகள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அழிவு
ஆப்கானித்தான் உள்நாடுப் போரின் போது, ஹட்டா தொல்லியல் களம் தாலிபான்களால் அழிக்கப்பட்டது.
படக்காட்சிகள்
-
காந்தாரக் கலைநயத்தில் கௌதம புத்தரின் தலைச் சிற்பம். ஹட்டா
-
சிற்ப வேலைப்பாடுகள் மிக்க தூணின் உச்சிப் பகுதி
-
கிபி முதல் நூற்றாண்டின் கிரேக்கத் துணிகள், மதுக்குடுவைகள் மற்றும் இசைக் கருவி, ஹட்டா
-
கிபி 3ம் நூற்றாண்டின் சிற்பங்கள்
-
வேலைப்பாடு மிக்க அழகிய சுருள் சிற்பம்
-
பௌத்த நினைவுச் சின்னத்தை தாங்கும் கிரேக்கக் கடவுள் அட்லாஸ்,
-
கிபி 3 - 4ம்நூற்றாண்டின் இளம் பெண், ஹட்டா
-
சிரிக்கும் பையன், ஹட்டா
-
கிபி 3ம் நூற்றாண்டின் சிற்பம், ஹட்டா
இதனையும் காண்க
- ஆப்கானிஸ்தானில் பௌத்தம்
- பீமரன் தூபி
- பீமரன் பேழை
- பாமியன் புத்தர் சிலைகள்
- காந்தாரத்தின் இருக்கும் புத்தர்
மேற்கோள்கள்
- ↑ Indo-Greek art
- ↑ John Boardman, The Diffusion of Classical Art in Antiquity (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-03680-2)
- ↑ See image பரணிடப்பட்டது 2013-01-03 at Archive.today
வெளி இணைப்புகள்