லோங்டிங்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 15:50, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

லோங்டிங் (Longding), வடகிழக்கு இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லோங்டிங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு கிழக்கே 308.4 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது. கிழக்கு இமயமலைத் தொடரில் உள்ள லோங்டிங் நகரம், கடல் மட்டத்திலிருந்து 693 மீட்டர் (2274 அடி) உயரத்தில் உள்ளது. இதன் கோடைக்கால வெப்பம் 30*C வரையும், குளிர்கால வெப்பம் 15*C வரை உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 926 குடும்பங்கள் கொண்ட லோங்டிங் பேரூராட்சியின் மக்கள் தொகை 4,234 ஆகும். அதில் 2,258 ஆண்கள் மற்றும் 1,976 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16.93% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.50% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 81.88 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 19.44%, இசுலாமியர் 2.17%, பௌத்தர்கள் 0.90%, கிறித்தவர்கள் 75.96% மற்றும் பிற சமயத்தினர் 1.53% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோங்டிங்&oldid=489348" இலிருந்து மீள்விக்கப்பட்டது