லோகபாலா

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:29, 21 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: நம்புகிறார்கள் → நம்புகின்றனர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லோகபாலா
Lokapala
Rakai Kayuwangi
Śrī Mahārāja Rakai Kayuwangi Dyah Lokapāla
Śrī Sajjanotsavatuṅga
ராக்காய் காயூவாங்கி
(Rakai Kayuwangi)
சிவக்கிரக கல்வெட்டு
லோகபாலா அரியணை ஏறியதைக் குறிப்பிடுகிறது (கிபி 856)
மாதரம் அரசர்
ஆட்சிக்காலம்8 சூன் 855 - 17 பிப்ரவரி 885
முன்னையவர்ராக்காய் பிக்கத்தான்
பின்னையவர்தகவாசன்
(Dyah Tagwas)
துணைவர்ராக்ரியான் மனாக்
(Rakryan Mānak)
குழந்தைகளின்
பெயர்கள்
தியா பூமிஜெயா
(Dyah Bhūmijaya)
பட்டப் பெயர்
சிறீ சஜனோதுவதுங்கன்
(Śrī Sajjanotsavatuṅga)
மரபுசஞ்சய வம்சம்
மதம்சைவ சமயம்
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

லோகபாலா அல்லது ராக்காய் காயூவாங்கி அல்லது சிறீ சஜனோதுவதுங்கன் (ஆங்கிலம்: Lokapala; Rakai Kayuwangi; இந்தோனேசியம்: Dyah Tagwas; Śrī Mahārāja Rakai Kayuwangi Dyah Lokapāla; Śrī Sajjanotsavatuṅga; ஜாவானியம்: Sri Maharaja Rakai Kayuwangi Dyah Lokapala Sri Sayyawasanottunggadewa) என்பவர் கிபி 9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த 7-ஆவது அரசர் ஆவார்.[1][2] இவரின் ஆட்சிக்காலம் கிபி 855 – கிபி 885 என அறியப்படுகிறது.

அவரின் இயற்பெயரான லோகபாலா என்பது தியா (Dyah) என்ற பட்டப் பெயரின் மூலமாகத் தெரிய வருகிறது. பொதுவாக அந்தப் பட்டப் பெயர், 'காயூவாங்கியின் இறைவன்' (Lord of Kayuwangi) என்று பொருள்படும் ராக்காய் காயூவாங்கி (Rakai Kayuwangi) எனும் அவரின் துணைப் பெயரால் குறிப்பிடப்படுகிறார்.[3]

மன்னர் லோகபாலா தன் எதிரிகளை தோற்கடித்த ஒரு வீர மன்னராக மாதரம் இராச்சியத்தின் வரலாற்றில் விவரிக்கப்படுகிறார்.[4]:158

வரலாறு

சிவக்கிரக கல்வெட்டு (Shivagrha inscription); அர்காபுரா கல்வெட்டு (Argapura inscription) மற்றும் வானுவா தெங்கா III கல்வெட்டு (Wanua Tengah III inscription) ஆகியவற்றின் படி, மன்னர் லோகபாலா பிறக்கும்போது அவரின் பெயர் லோகபாலா. 907 தேதியிட்ட மந்தியாசி கல்வெட்டில், அவர் ராக்காய் காயூ வாங்கி (Rakai Kayuwangi) என்று பெயரிடப்பட்டுள்ளார்.

வானுவா தெங்கா III கல்வெட்டு, அவரின் பிறந்த பெயரான லோகபாலா; மற்றும் அவரின் பட்டப் பெயரான காயூ வாங்கி என இரண்டு பெயரையும் வழங்குகிறது.[5]

இந்து காவல் தெய்வம் லோகபாலன்

லோகபாலா என்ற பெயர் இந்து காவல் தெய்வமான லோகபாலன் எனும் பெயருடன் தொடர்புடையதாக இருக்கலாம். ராக்காய் காயூவாங்கி என்ற பெயர் ஒரு பட்டப்பெயர் ஆகும். அது ஒரு தனிப்பட்ட பெயர் அல்ல. ஜாவாவின் மன்னராக அவர் ஆட்சி செய்த காலத்தில், லோகபாலா ராக்காய் என்று அழைக்கப்பட்டார்.

ராக்காய் என்ற சொல், காயூவாங்கி மாவட்டத்தின் பிரபு எனும் தகுதிக்குச் சமமான ஒரு பண்டைய ஜாவானிய பட்டப்பெயர் ஆகும்.[2]

சிறீ சஜனோதுவதுங்கன்

அவரின் ஆட்சிப் பட்டப் பெயர் சிறீ சஜனோதுவதுங்கன் (Śrī Sajjanotsavatuṅga) என்று பதிவாகி உள்ளது. சிறீ சஜனோதுவதுங்கன் எனும் பெயர்ச்சொல், லோகபாலா என்பவர் புகழ்பெற்றவர், மகிழ்ச்சி, நல்லொழுக்கத்தில் உயர்ந்தவர்' என்று சமசுகிருத மொழியில் பொருள்படுகிறது. ராம்வி கல்வெட்டு (Ramwi inscription) போன்ற சில கல்வெட்டுகளில் மட்டுமே சிறீ சஜனோதுவதுங்கன் எனும் பெயர் காணப்படுகிறது.[6]

வானுவா தெங்கா III கல்வெட்டு

வானுவா தெங்கா III கல்வெட்டு, லோகபாலா 8 சூன் 855 அன்று அரியணை ஏறியதாகக் கூறுகிறது.[2][3][7] லோகபாலா, 12 நவம்பர் 856 அன்று வெளியிட்ட சிவக்கிரக கல்வெட்டின் பதிவுகளின்படி, அவர் ஒரு பிருமாண்டமான சிவன் கோயிலைத் திறந்து வைத்தார் என்றும் அறியப்படுகிறது.

அந்த சிவன் கோயில் என்பது பிரம்பானான் கோயில் வளாகம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.[8]:20 பிரம்பானான் கோயில், சிவபெருமானைச் சிறப்பு செய்வதற்காகக் கட்டப்பட்டது என சிவக்கிரக கல்வெட்டு கூறுகிறது. பிரம்பானானின் அசல் பெயர் சிவன்-கிரகம் (Shiva-grha); சிவனின் இல்லம் என பொருள் படுகிறது.

சிவக்கிரக கல்வெட்டு

லோகபாலா, தன் தந்தை சதினிங்கராட் (Jatiningrat) (ராக்காய் பிக்கத்தான்) வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என செஜாரா நேசனல் இந்தோனேசியா (Sejarah Nasional Indonesia) எனும் இந்தோனேசிய தேசிய வரலாற்றுப் பதிவு சிவக்கிரக கல்வெட்டை மேற்கோள் காட்டுகிறது.

ராக்காய் பிக்கத்தான் பதவி விலகிய பிறகு சாங் சதினிங்கராட் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார். ராக்காய் பிக்கத்தானின் வாரிசான லோகபாலாவை பிரமோதவர்தனியின் வாரிசு என்றும் வரலாற்றாசிரியர்கள் சிலர் நம்புகின்றனர்.[4]:158

ராக்காய் குருன்வாங்கி தியா சலாது

ராக்காய் குருன்வாங்கி தியா சலாது (Rakai Gurunwangi Dyah Saladu) என்பவர் ராக்காய் பிக்கத்தான் மற்றும் பிரமோதவர்தனி தம்பதிகளின் மூத்த மகன் ஆவார். இருப்பினும் அவர், ராக்காய் பிக்கத்தானின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இளைய மகனான லோகபாலா தான் அரச வாரிசாக பதவி உயர்வு பெற்றார்.

ரத்து போகோ மலை அடிவாரத்தில் (Ratu Boko) நடந்த ஒரு போரில், தன் தந்தையின் எதிரிகளைத் தோற்கடிப்பதில் லோகபாலா ஆற்றிய வீரத் தகுதிகளே அதற்குக் காரணம் ஆகும்.[4]:159 இருப்பினும், லோகபாலா மற்றும் அவரின் அண்ணனான ராக்காய் குருன்வாங்கி தியா சலாது இடையிலான குடும்ப உறவுகள் எந்தக் கல்வெட்டிலும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.[3]

இறுதிகாலம்

லோகபாலா சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரின் காலத்தில் பல கல்வெட்டுகளை வெளியிட்டார். லோகபாலரின் காலத்தில் கிழக்கு ஜாவாவில் மாதரம் இராச்சியம் விரிவாக்கம் அடைந்தது. அவர் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தார்; ஆனாலும் வெளிநாட்டு வர்த்தகத்தில் சரிவுகள் ஏற்பட்டன.

லோகபாலாவின் ஆட்சிக் காலத்தில், அவரின் அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அவ்வப்போது இருந்தன. லோகபாலருக்குப் பிறகு 17 பிப்ரவரி 885-இல் மன்னர் தகவாசன் என்பவர் ஆட்சிக்கு வந்தார்.[3]

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
லோகபாலா
855–885
பின்னர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Dwiyanto, Djoko. 1986. Pengamatan terhadap Data Kesejarahan dari Prasasti Wanua Tengah III tahun 908 Masehi. Dalam PIA IV (IIa). Jakarta: Pulit Arkenas, hlm. 92–110.
  2. 2.0 2.1 2.2 Risa Herdahita Putri (2019-05-31). "Berebut Takhta Mataram Kuno". Historia - Majalah Sejarah Populer Pertama di Indonesia (in இந்தோனேஷியன்). Retrieved 2020-12-30.
  3. 3.0 3.1 3.2 3.3 Wisseman Christie, Jan (2001). "Revisiting Early Mataram". Fruits of Inspiration, studies in honour of Prof. J.G. de Casparis: 25–55. 
  4. 4.0 4.1 4.2 Marwati Djoened Poesponegoro; Nugroho Notosusanto (2008). Sejarah Nasional Indonesia: Zaman Kuno (in இந்தோனேஷியன்). Balai Pustaka. ISBN 978-9794074084. கணினி நூலகம் 318053182.
  5. "Prasasti Peninggalan Sejarah Kerajaan Mataram Kuno". KOMPAS.com (in இந்தோனேஷியன்). 2 September 2020. Retrieved 2020-12-30.
  6. Boechari (1985–1986). Prasasti Koleksi Museum Nasional. p. 38.
  7. Kusen (1994). "Raja-raja Mataram Kuna dari Sanjaya Sampai Balitung Sebuah Rekonstruksi Berdasarkan Prasasti Wanua Tengah III". Berkala Arkeologi 14 (2): 82–94. 
  8. Tjahjono Prasodjo; Thomas M. Hunter; Véronique Degroot; Cecelia Levin; Alessandra Lopez y Royo; Inajati Adrisijanti; Timbul Haryono; Julianti Lakshmi Parani; Gunadi Kasnowihardjo; Helly Minarti (2013). Magical Prambanan. Yogyakarta: PT (Persero) Taman Wisata Candi Borobudur, Prambanan & Ratu Boko. ISBN 978-602-98279-1-0.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோகபாலா&oldid=489275" இலிருந்து மீள்விக்கப்பட்டது