லிகாபலி
லிகாபாலி (Likabali), வடகிழக்கு இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கீழ் சியாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 157.5 கிலோ மீட்ட ர் தொலைவிலும்; அசாம் மாநிலத்தின் தின்சுகியா நகரத்திற்கு மேற்கே 106 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 69 குடியிருப்புகள் கொண்ட லிகாபாலி கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 462 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 88.03% ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 243 ஆக உள்ளனர்.[1]