லாரி பேஜ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:09, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லாரி பேஜ்
இயற்பெயர் லாரி பேஜ்
பிறப்பு லாரன்ஸ் பேஜ்
பணி கணினியியலாளர், தொழிலதிபர்
தேசியம் அமெரிக்கர்
கல்வி நிலையம் கிழக்கு லான்சிங் உயர்நிலைப் பள்ளி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
அறியப்படுவது கூகுள் நிறுவனர்களுள் ஒருவர். கூகுளின் முதன்மை செயல் அதிகாரி
துணைவர் லூசின்டா சவுத்வொர்த்

லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் (Larry Page, பி. மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.

இளமைக்காலம்

இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு செர்கே பிரின் என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லாரி_பேஜ்&oldid=487698" இலிருந்து மீள்விக்கப்பட்டது