றயினே
| றயினே Rheine | |
| சின்னம் | அமைவிடம் |
Rheine இன் சின்னம் |
|
| செயலாட்சி (நிருவாகம்) | |
| நாடு | இடாய்ச்சுலாந்து |
|---|---|
| மாநிலம் | வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா |
| நிரு. பிரிவு | மியூன்சுடர் |
| மாவட்டம் | இசுடைன்ஃபோர்ட் |
| Mayor | பீட்டர் லியூட்மன் |
| அடிப்படைத் தரவுகள் | |
| பரப்பளவு | 145 ச.கி.மீ (56 ச.மை) |
| ஏற்றம் | 35 m (115 ft) |
| மக்கட்தொகை | {{{Einwohner or population}}} |
| வேறு தகவல்கள் | |
| நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
| வாகன அனுமதி இலக்கம் | ST, BF, TE |
| அஞ்சல் குறியீடுs | 48429-48432 |
| Area codes | 05971, 05975, 05459 |
| இணையத்தளம் | www.rheine.de |
| Location of the town of றயினே Rheine within இசுடைன்ஃபோர்ட் district | |
றயினே (Rheine, இடாய்ச்சு: [ˈʁaɪnə] ( கேட்க)) என்பது செருமனியில் இசுதைன்பூர்த் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகரம். எம்ஸ் நதி அருகே அமைந்திருக்கும் இந்நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். இறையினே வான்படைத்தளம் இங்கு அமைந்துள்ளது. 77,893 பொதுமக்கள் வாழ்கின்றனர் (திசம்பர் 2022).
றயினேயின் பெயர் வடிவங்கள்
றயினேயை "இறையினே"; "றயின"; "இறைனே"; "றைனே"; "றைனெ" என்றும் கூறுலாம்.
றயினேயில் உள்ளே தமிழர்கள்
இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக இந்த நகரத்தில் உள்ள ஏராளமான தமிழர்கள் இங்கு வந்தனர். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
சங்கங்கள்
- யேர்மன் தமிழ் கலாச்சார விளையாட்டுக் கழகம் இறைனே (Deutsch-Tamilischer Kultur- und Sportverein Rheine e.V. - DTKSV), 1991ம் ஆண்டில் இச்சங்கம் உருவாகியது.
- தமிழாலயம் றைனெ (Thamilalayam Rheine), புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ் கற்க வகுப்புகள் இங்கே ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஆலயங்கள்
- இறைனீச்சுவர பெருமான் திருக்கோயில் (Rheineechchuram அல்லது Rheinesvara) - இவ்வாலயத்தில் 2023 செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை திருக்குட திருமுழுக்கு விழா நடைபெற்றது.
