மொரப்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 05:51, 25 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (கோவில்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மொரப்பூர் (Morappur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகமான வட்டார வளர்ச்சி அலுவலகம் மொரப்பூரில் இயங்குகிறது. இந்த ஊர் மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், தர்மபுரியிலிருந்து சுமார் 23 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பள்ளிகள்

அங்கன் வாடி மையங்கள் தோராயமாக 5 உள்ளன. தொடக்கப்பள்ளிகள் 4 உள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் இரண்டு உள்ளன. மேலும் தனியார் பள்ளிகள் 3 உள்ளன. தனியார்கல்லூரிகள் 2 உள்ளன.

மருத்துவமணை

ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன் அடைகினறனர்.

கோவில்கள்

மொரப்பூரில் கோவில்கள்: சிங்கார வேலன் சுவாமி திருக்கோயில், சென்னகேசவ பெருமாள் கோயில், பேட்டை மாரியம்மன் திருக்கோயில், தீப்பாஞ்சி அம்மன் திருக்கோயில் ஆகியன சிறப்பு வாய்ந்த கோயில்கள் ஆகும்.

தொடருந்து நிலையம்

சென்னை - கேரளா வரை செல்லும் தொடருந்துகள் மொரப்பூர் தொடருந்து நிலையம்[2] வழியாக செல்லுகிறது. மொரப்பூர் இரயில் நிலையம் 1866-இல் ஆங்கிலோயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-08-24.
  2. மொரப்பூர் தொடருந்து நிலையம்
"https://tamilar.wiki/w/index.php?title=மொரப்பூர்&oldid=478161" இலிருந்து மீள்விக்கப்பட்டது