மெட்வே

தமிழர்விக்கியிலிருந்து
imported>Muthu.Siluppan பயனரால் செய்யப்பட்ட 07:44, 16 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சாத்தம் கப்பற்பட்டறை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மெட்வே

படிமம்:Medway UK locator map.svg
இணையதளம்www.medway.gov.uk

மெட்வே (Medway) என்பது தென்கிழக்கு இங்கிலாந்தில் கென்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கென்ட் மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தாலும், சுய ஆட்சியில் இயங்குகிறது.[1]

முக்கிய இடங்கள்

உரோச்சட்டர் தேவாலயம்

படிமம்:Rochester Cathedral from west.jpg
மேற்கிலிருந்து தோன்றும் உரோச்சட்டர் தேவாலயம்

கி.பி.604 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் தேவாலயம், இங்கிலாந்தின் இரண்டாவது பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். ஆங்கிலத்தில் மிகப் பழமையான டெஃடுசு ரோஃப்பின்சசு என்ற சுவடு 12 ஆம் நூற்றாண்டில் இங்குதான் எழுதப்பட்டது.

உரோச்சட்டர் கோட்டை

படிமம்:Rochester Castle from Medway Brid, Kent.JPG
உரோச்சட்டர் கோட்டை, கென்ட்

கி.பி. 1088 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் கோட்டை இங்கிலாந்தின் மிகவும் உயரமான நார்மன் அரண் ஆகும்.

அப்னர் கோட்டை

படிமம்:Upnor Castle 2.jpg
அப்னர் கோட்டை

முதலாம் எலிசபத்து இராணியின் கட்டளையால் கி.பி. 1559 இல் அப்னர் கோட்டை கட்டப்பட்டது.

அம்கெர்ச்ட் கோட்டை

கி.பி. 1667 மெட்வே மற்றும் சாத்தம் கப்பற்பட்டறை மீதான டச்சுத் தாக்குதலுக்குப் பின்னர், சாத்தம் கப்பற்பட்டறையின் மீதான தரைவழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அம்கெர்ச்ட் கோட்டை கட்டப்பட்டது.[2]

கிழக்குவாயில் வீடு

படிமம்:Eastgate House, Rochester High St.JPG
கிழக்குவாயில் வீடு, உரோச்சட்டர், கென்ட்

கி.பி. 1590 ல் சாத்தம் கப்பற்பட்டறையில் இயங்கிவந்த துணைநிலைப் படை அதிகாரிகளின் கீழ் இயங்கிய எழுத்தர்களால் (Clerk of the Cheque) கட்டப்பட்டது. சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்ட பிக்விக் பேப்பர்கள் என்ற புதினத்திலும் இவ்விடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

குயில்ட்கால்

கி.பி. 1687 இல் கட்டப்பட்ட குயில்ட்கால் உள்ளாட்சிக் கட்டடம், தற்போது மெட்வேயின் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.

சாத்தம் கப்பற்பட்டறை

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சாத்தம் கப்பற்பட்டறை

சாத்தம் கப்பற்பட்டறை கி.பி 1567 மற்றும் கி.பி. 1572 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கப்பல் கட்டுமானத் தளம் ஆகும்[3].

முக்கிய நபர்கள்

வில்லியம் ஆடம்சு

வில்லியம் ஆடம்சு (மாலுமி) என்பவர் ஜப்பானை முதன் முதலில் சென்றடைந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில், சில்லிங்காம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

சார்லஸ் டிக்கின்ஸ்

சார்லஸ் டிக்கின்ஸ் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Campaigning to regain city status for Medway towns". Retrieved 2015-08-05.
  2. "Origins of Fort Amherst". Retrieved 2015-08-12.
  3. MacDougall, Philip (2012). "The Early Years". Chatham Dockyard: The Rise and Fall of a Military Industrial Complex. The History Press. ISBN 9780752487762. {{cite book}}: |access-date= requires |url= (help)

வெளியிணைப்புகள்

  1. அதிகாரப்பூர்வ மெட்வே நிர்வாகத் தளம்
  2. மெட்வே சுற்றுலாத் தகவல் தளம்
"https://tamilar.wiki/w/index.php?title=மெட்வே&oldid=474543" இலிருந்து மீள்விக்கப்பட்டது