மாபுராணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 21:08, 19 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மாபுராணம் என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நூல் ஆகும். இது இரண்டாம் தமிழ் சங்க காலத்தியதாகக் கருதப்படுகிறது.[1][2] இது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெருந் தொன்னூல் என்ற தமிழ்ப் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழிப் பெயராகும்.[3] புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்கணம் முதலாவதாக பல்வகை இலக்கணமும் கூறுதல் வடநூலாருக்கு உடன்பாடு. இதனை வடநூல் அக்னி புராணத்தால் அறியலாம். இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்தது.[3]

அகத்தியர் இயல், இசை, நாடகம் முதலிய எல்லாவற்றிற்கும் பரந்து விரிந்த இலக்கணம் அமைத்தார் என்றும் மாபுராணம் ஆசிரியர் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை எடுத்து தொகை, வகை வாரியாகக் கூறினார் என்றும் கொள்ளலாம்.[3]

மாபுராணத்தை எழுதியவர் குறுமுனிவரின் மாணாக்கர் பன்னிருவரில் சிகண்டி என்னும் முனிவர் ஆவார். அநாகுலன் என்ற பாண்டியனுக்கும் திலோத்தமை என்ற பெண்ணுக்கும் பிறந்த சாரகுமாரன் பாண்டியன் இசையறிதல் பொருட்டு இந்நூல் இயற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. சீனிவாச ஐயங்கார், பி. டி. (1929). History of the Tamils: from the earliest times to 600 A.D. New Delhi: Asian Educational Service. pp. 231–232. ISBN 81-206-0145-9.
  2. சுவெலபில், கமில் (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. Leiden: Brill. p. 47. ISBN 90-04-03591-5.
  3. 3.0 3.1 3.2 3.3 இராகவையங்கார், இரா. (1941). தமிழ் வரலாறு. மதுரை: ஈ. எஸ். வரதராஜையர். pp. 221–225.
"https://tamilar.wiki/w/index.php?title=மாபுராணம்&oldid=465109" இலிருந்து மீள்விக்கப்பட்டது