மடுவு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Gowtham Sampath பயனரால் செய்யப்பட்ட 05:28, 17 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 4256082 by Gowtham Sampath (talk) உடையது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மடுவு
வகைMelee
அமைக்கப்பட்ட நாடுஇந்தியா

மடுவு அல்லது மறு (Maduvu) என்பது மான் கொம்பால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கருவி ஆகும். இது தமிழர் தற்காப்புக் கலையில் பயன்படுத்தப்படும் ஒரு போர்க் கருவி ஆகும்.[1][2][3]

மான் கொம்பு ஆயுதம்

படிமம்:Kathiravan.jpg
தற்காப்புக் கலைஞர்

சிலம்பத்தில் மான் கொம்பை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர். ஏனெனில் இந்த மான் கொம்பினை வாள் வைத்து எளிதில் வெட்ட முடியாது. அதனால் அவற்றை கேடயமாகப் பயன்படுத்தவும், அதன் கூரான பகுதியைக் கொண்டு எதிரியைத் தாக்கவும் முடியும். இந்த மான் கொம்பில் கேடயம் மற்றும் ஈட்டி பொருத்தியும் பயன்படுத்தியுள்ளனர்.

படிமம்:Maankombu.jpg
ஈட்டி மான்கொம்பு

மான்

படிமம்:மான்வரைபடம்.jpg
புல்வாய்

இந்த ஆயுதத்தில் பயன்படுத்தப்படும் கொம்பானது புல்வாய் (Blackbuck) என்னும் வகையைச் சேர்ந்த மானில் இருந்து கிடைப்பது ஆகும். அதில் ஆண் மானின் பெயர் இரலை பெண் மானின் பெயர் கலை. இந்த மான் இனம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு பகுதியில் அதிகமாகக் காணப்பட்டது. இந்த மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பல்வேறு தமிழ் பெயர்களும் உண்டு. இவை, உலகில் அழகிய கொம்புகளை உடைய முதல் 10 வகை மான் இனங்களில், 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

  1. PutraDanayu (2021-03-30). Sword: Tell about sword in human history (in ஆங்கிலம்). Putra Ayu. ASIN B097SC83NR.
  2. Guruji Murugan, Chillayah (20 October 2012). "Silambam Weapons Deer Horn Maduvu". Silambam. Retrieved 31 May 2013.
  3. Richard F. Burton (1884). The Book Of The Sword. Dover. ISBN 0-486-25434-8.
"https://tamilar.wiki/w/index.php?title=மடுவு&oldid=457125" இலிருந்து மீள்விக்கப்பட்டது