பௌ-பீஜ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Goutam1962 பயனரால் செய்யப்பட்ட 09:45, 17 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (#WPWPTA)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search


தொகுப்பு பௌ-பீஜ்

பௌ-பீஜ் (Bhau-beej) அல்லது பாய் தூஜ் (Bhai Dooj) அல்லது பாய் போட்டா (Bhai Phota) என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்துக்களின் விழா வட இந்தியாவில் தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்களின் அண்ணன் தம்பியரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலனுக்காக சகோதரிகள் வேண்டுதல் நிகழ்த்துவதும் வெற்றித்திலகம் இடுவதும் சகோதரர்கள் தங்கள் பெண் உடன்பிறப்புகளுக்காக பரிசுகள் வாங்கிவருவதும் வழைமையாகும். இந்த விழா வங்காளம், மகாராட்டிரம், கொங்கண் பகுதிகளிலும் கர்நாடகம் மற்றும் கோவாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நேபாளத்திலும் இது முதன்மையான சமயவிழாவாக உள்ளது.

இந்துத் தொன்மவியல் கதைகளின்படி தீபாவளித் திருநாளில் நரகாசுரனை வென்றபின்னர் கிருட்டினன் தனது தங்கை சுபத்திரையை காண வந்தபோது சுபத்திரை அவருக்கு விருந்துகள் அளித்து வெற்றித்திலகமிட்டதை நினைவு கூறுமுகமாக இந்தத் திருநாள் கொண்டாடப் படுவதாக்க் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பௌ-பீஜ்&oldid=454402" இலிருந்து மீள்விக்கப்பட்டது