பகெத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 05:16, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பகெத் என்பது பிரான்சில் தோன்றிய நீளமான ஒல்லியான ரொட்டியாகும். மொறுமொறுப்பான சுவையினால் இது தனித்துவம் பெற்றது.[1]

பகெத்
மாற்றுப் பெயர்கள்ஃப்ரென்ச் ஸ்ட்டிக்
வகைரொட்டி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்பிரான்ஸ்[2]
முக்கிய சேர்பொருட்கள்மாவு , நீர் , நொதியம் , உப்பு
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
263 கலோரி (1101 kJ)

தயாரிப்பு

பொதுவாக 5-6 செ.மீ விட்டமும் 65 செ.மீ நீளமும் கொண்ட பகெத், கோதுமை மாவு, நீர், நொதியம் மற்றும் உப்பு ஆகிய பொருட்களினால் தயாரிக்கப்படுகிறது. இது பேட்டன் (தடி), ஃபிசெல் (நூல்) ஆகிய அடைமொழிகள் கொண்டும் அழைக்கப்படுகிறது. இது 100 கிராம் முதல் 250 கிராம் வரை கனக்கும். 100 கிராம் எடையுள்ள பகெத் ஃபிசெல் என்றும் 250 கிராம் எடையுள்ள பகெத் பேட்டன் என்றும் அழைக்கப்பெறுகிறது. பகெத்தின் அதிகபட்ச நீளம் சுமார் ஒரு மீட்டர் ஆகும். [3][4]

பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து பகெத்துகள் செய்யப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. சான்விச்சுகளாகவோ பழக்கூழ் உள்ளிட்ட சேர்க்கைகளுடனோ இது பரிமாறப்படுகிறது. சூடான சாக்லேட்டோடு இது பரிமாறப்படும் போது இதை டார்ட்டைன்ஸ் என்று அழைக்கிறார்கள்.[5]

பாரம்பரிய பகெத்

மேற்கோள்கள்

  1. "பகெத் பற்றிய விவரங்கள் - லெஜி பிரான்ஸ்".
  2. https://www.discoverwalks.com/blog/the-all-important-history-of-the-baguette/
  3. "பிரெஞ்சு ஸ்ட்டிக் - டிக்ஷனரி".
  4. "ரொட்டிகளின் தகவல்கள் - பிரெஞ்சு டிசையர்". Archived from the original on 2021-03-06. Retrieved 2021-05-08.
  5. "பகெத்தின் தோற்றம் - செசிம்".
"https://tamilar.wiki/w/index.php?title=பகெத்&oldid=421460" இலிருந்து மீள்விக்கப்பட்டது