துகுலா
துகுலா (Dukula) என்பது மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பண்டைய இந்தியத் துணி வகையாகும்.[1] துகுலா உட்படச் சில சமகாலத் துணி வகைகளான சொளமா, நேத்ரா, திரித்பட்டா ஆகியவை பட்டுடன் ஒப்பிடக்கூடிய துணிகளில் அடங்கும்.[2] சில ஆதாரங்கள் துகுலா துணி பட்டு வகை[3] என்று கூறுகின்றன. ஆனால் உண்மையில் இது பட்டை நாரால் ஆனது. இதனால் இது மெல்லிய துணியாக இருந்தது. அமரசிம்மனின் கூற்றுப்படி, "துகுலா" என்ற சொல் "சொளமா" (லினன்)[4][5] என்பதற்கு ஒத்த சொல்லாகும்.
இலக்கியக் குறிப்புகள்
குப்தர் கால இலக்கியத்தில் துகுலா (குறிப்பாக அன்னம் வடிவத்துடன்) மிகச்சிறந்த துணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] ஏழாம் நூற்றாண்டு அறிஞரான பாணபட்டர் (மன்னர் ஹர்ஷவர்தனனின் அரசவையில் அரசவைக் கவியாக இருந்தவர்), ஹன்சா (அன்னம் அல்லது வாத்து) வடிவிலான ஒரு பொருளான "ஹன்சா துகுலா"வைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தேவர்களும் அரசர்களும் இதை அணிந்தனர். ஹர்சசரிதம் (கனோஜ் மன்னர் ஹர்ஷவர்தனரின் வாழ்க்கை வரலாறு) பல்வேறு வகையான துணிகளைப் பட்டியலிடுகிறது. பாணபட்டர் ஹர்ஷரின் சகோதரியின் (ராஜ்யசிறீயின்) திருமணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு துணிகளை விவரிக்கிறார். "துகுலா," "அம்சூகா," "சொளமா," "பதரா," "நேத்ரா" ஆகியவை இவர் குறிப்பிடும் துணிகளில் அடங்கும்.[2][5][6]
காளிதாசரின் குமாரசம்பவ கவிதையில், சிவபெருமானின் உடையையும், இந்து தெய்வமான பார்வதியின் உடையையும் ஒப்பிடும் போது, "துகுலா"வையும் குறிப்பிடுகிறார்.[2] காளிதாசர் விக்ரமோவர்வசியம், ருது சம்ஹாரத்திலும் துகுலாப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவர் துகுலாவை பட்டு என்று குறிப்பிட்டார்.[2]
தயாரிப்பு
துகுலா துணிகளுக்கு வங்காளம் நன்கு அறியப்பட்ட உற்பத்தி மையமாக இருந்தது.[6]அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வங்காளத்தை துகுலத்தின் உற்பத்தியாளராக ஒப்புக்கொள்கிறார்.[7]
மேலும் காண்க
- கௌஷேயா (பட்டு)
- ஹம்சா (பறவை)
மேற்கோள்கள்
- ↑ Prakash, Om (2005). Cultural History of India (in ஆங்கிலம்). New Age International. p. 382. ISBN 978-81-224-1587-2.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Agrawal, Yashodhara (2003). Silk brocades. Internet Archive. New Delhi : Roli Books. p. 10. ISBN 978-81-7436-258-2.
- ↑ Eitel, Ernest John; Takakuwa, K. (1904). Hand-book of Chinese Buddhism, being a Sanskrit-Chinese dictionary with vocabularies of Buddhist terms in Pali, Singhalese, Siamese, Burmese, Tibetan, Mongolian and Japanese. Robarts - University of Toronto. Tokyo, Sanshusha. pp. 54, 55.
- ↑ Mookerji, Radhakumud (2016-01-01). Chandragupta Maurya and His Times (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 117. ISBN 978-81-208-0433-3.
- ↑ 5.0 5.1 Journal Of The Indian Society Of Oriental Art Vol.12. 1944.
- ↑ 6.0 6.1 Das, Santosh Kumar (1925). Economic history of ancient India. Santosh Kumar Das, Howrah. p. 146.
- ↑ Journal of the Bihar and Orissa research society. 1919. p. 320.