திறை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 03:44, 22 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: அமைப்புக்கள் → அமைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

திரை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்) ஆகும். இது பணம், பொருள் போன்றவை மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக வலிமை குறைந்தவர் மீது திணிக்கப்படும் வணிக ஒப்பந்தங்கள் உருவிலும் இருக்கலாம். பொதுவாக, திறையைச் செலுத்தாவிட்டால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தின் அடிப்படையிலேயே திறை கொடுக்கப்படுகின்றது. முற்காலத்தில், வலிமை கொண்ட நாடுகள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து அடிப்படுத்தியோ ஒப்பந்தங்கள் போன்ற வேறு வழிகள் மூலமோ அவற்றிடமிருந்து ஆண்டுதோறும் திறை பெறும் வழக்கம் இருந்தது. பொதுவாக, வலிமை குறைந்த நாடுகள், வலிமை கொண்ட நாடுகளுக்குத் திறை செலுத்தி வந்தன. இவ்வாறு திறை செலுத்திய நாடுகள் சிற்றரசுகள் எனப்பட்டன. நாடுகள் மட்டுமன்றி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற வணிக அமைப்புகள் கூட சிற்றரசர்களிடமிருந்து திறை பெற்றமைக்கான சான்றுகள் உண்டு.

பெரிய வலிமைமிக்க அரசுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்ட சிறிய அரசுகளும், மேற்படி பெரிய அரசுகளுக்குத் திறை செலுத்தும் வழக்கம் இருந்தது. இது, பொதுவாக, போர்களுக்குப் படை திரட்டுதல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், டேலியன் கூட்டமைப்பைச் சேர்ந்த நகரங்கள், அக்கூட்டமைப்பிலிருந்த வலிமைமிக்க நகரான ஏதென்சுக்குத் திறை செலுத்தின. பண்டைக்கால பாரசீக ஆர்க்கிமெனிட் பேரரசு திறை பெற்ற பழங்காலத்துத் திறை பெறும் பேரரசுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மத்தியகாலத்து உருசியாவின் மங்கோல் ஆட்சியாளர்கள், உருசிய அரசுகளிடமிருந்து திறையை மட்டுமே எதிர்பார்த்தனர். அவ்வாறு திறை செலுத்திய உருசிய அரசுகள் தொடர்ந்தும் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்கவைத்திருந்தன. அசிரியா, பபிலோன், கர்த்தாஜ், ரோம் போன்ற பேரரசுகளும் தமது மாகாணங்களிடமிருந்தும், தாம் அடிப்படுத்திய நாடுகளிடமிருந்தும் திறை பெற்றன. பண்டைக்காலச் சீனா சப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, இந்தோனேசியா, மத்திய ஆசியா போன்ற நாடுகளிடமிருந்து திறை பெற்றது.[1]

சோழன் பெற்ற திறைப்பொருள்

முதலாம் குலோத்துங்கன் பெற்ற திறைப்பொருள்கள் பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகிறது.

  • அரிவையர் பட்டம் (பட்டாளம்)
  • ஆடலம் (ஆடகப்பொன்)
  • ஆரம் (சந்தனம்)
  • ஆனை (யானை)
  • ஒட்டகம்
  • கனகக் குவை (பொன் குவியல்)
  • கொடி
  • நவமணி வடம்
  • நித்திலம் (முத்து)
  • பகடு (களிறு)
  • பதக்கம்
  • பிடி (இலக்கணம் தெரிந்த பெண்யானை)
  • பொற்கலம்
  • மணித்திறள்
  • மரகதக்குழை
  • முடிப்பெட்டகம் (முன்னோர் சூடிய முடி)[2]

பிரித்தானிய இந்தியாவில் திறை

சுதேசி சமஸ்தானங்கள் 1857ஆம் முடிய பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கும், பின்னர் பிரித்தானிய பேரரசுக்கும் 1947ஆம் முடிய ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது தங்கம், வெள்ளி, நெல், கோதுமை போன்ற பொருட்கள் வடிவில் திறை செலுத்தி வந்தன.

சீனாவில் திறை

மிகப் பழங்காலத்திலேயே சீனாவில் திறை செலுத்தும் முறை நிலவி வந்தது. இது சிற்றரசுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நிருவாக வழிமுறையாக மட்டுமன்றி, சீனாவுக்குள் வணிகம் புரிவதற்கான உரிமை தொடர்பிலும் பயன்பட்டது. திறை செலுத்தும் வெளிநாடுகள், பேரரசின் பாதுகாப்புடனும், அதன் விதிமுறைகளுக்கு அமைவாகவும் சீனாவுக்குள் இருபக்க வணிகத்தில் ஈடுபடக்கூடியதாக இருந்தது.

மேற்கோள்கள்

  1. Lockard, Craig A. (2007). Societies, Networks, and Transitions: A Global History: To 1500. Cengage Learning. p. 315. ISBN 0-618-38612-2.
  2.  
    ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்
    ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்
    ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய
    ஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில் பதக்கமே. 334

    இவையு மிவையு மணித்திரள் இனைய விவைகன கக்குவை
    இருளும் வெயிலு மெறித்திட இலகு மணிமக ரக்குழை
    உவையு முவையுமி லக்கணம் உடைய பிடியிவை யுள்பக
    டுயர்செய் கொடியிவை மற்றிவை உரிமை யரிவையர் பட்டமே. 335

"https://tamilar.wiki/w/index.php?title=திறை&oldid=400167" இலிருந்து மீள்விக்கப்பட்டது