சொதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kurinjinet பயனரால் செய்யப்பட்ட 21:25, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சொதி அல்லது பாற்சொதி என அழைக்கப்படும் உணவு, தேங்காய்ப்பால் அல்லது பசும்பாலில் வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, கறிவேப்பிலை போன்ற சுவைபொருட்கள் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்யப்படும் ஒரு நீர் உணவு. இது பொதுவாக இலங்கையிலும், இலங்கையர் புலம் பெயர்ந்த இடங்களிலும் இடியப்பம், பிட்டு, சோறு போன்றவற்றுடன் சேர்த்து உண்ணப்படும் உணவு ஆகும்.

இது ஒரு நீர் உணவாக உள்ளதால் குழந்தைகளும் சிறுவர்களும் இதனை விரும்பி உண்பது வழக்கம்.

திருமண விருந்தில் சொதி

தமிழ்நாட்டில் முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் சில பிரிவினரின் திருமண விருந்தில் சொதி, பரிமாறப்படுகிறது. திருமண நிகழ்விற்கு அடுத்த நாள் மணமகனின் வீட்டார் சார்பில் நிகழ்த்தப்படும் மறுவீட்டு விருந்தில் சொதிக் குழம்பு பரிமாறப்படும்.[1]

வகைகள்

  • பால் சொதி
  • மீன் சொதி
  • இறால் சொதி
  • தக்காளிச் சொதி
  • அகத்திக்கீரைச் சொதி
  • மாங்காய்ச் சொதி

சான்றுகள்

  1. "திருநெல்வேலி கல்யாணத்தில் சொதி". Retrieved ஆகத்து 22, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=சொதி&oldid=373360" இலிருந்து மீள்விக்கப்பட்டது