சேய் அணை
| சேய் அணை Sei Dam | |
|---|---|
சேய் அணை நீர்த்தேக்கத்தின் காட்சி | |
| அமைவிடம் | கோட்ரா தாலுகா, உதய்பூர் மாவட்டம், இராசத்தான் |
| புவியியல் ஆள்கூற்று | 24°43′09″N 73°11′53″E / 24.719217°N 73.198075°E |
| கட்டத் தொடங்கியது | 1968-69[1] |
| இயக்குனர்(கள்) | இராசத்தான் அரசு[2] |
| அணையும் வழிகாலும் | |
| தடுக்கப்படும் ஆறு | சேய் ஆறு |
| உயரம் | 28 மீட்டர்[2] |
| நீளம் | 1453 m[2] |
| வழிகால் அளவு | விநாடிக்கு 1756 கனமீட்டர்கள்[2] |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 31.33 மில்லியன் கன மீட்டர்[3] |
சேய் அணை (Sei Dam) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதய்பூர் மாவட்டத்தில் இருக்கும் கோட்ரா தாலுகாவில் சபர்மதி ஆற்றின் துணை ஆறான சேய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[4] ஒரு மண் ஈர்ப்பு அணையான இது சேய் திருப்பிவிடும் அணை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[3] அணையின் முதன்மை நோக்கம் பாலி மாவட்டத்தில் உள்ள இயவாய் ஆற்றில் உள்ள இயவாய் அணைக்கு திருப்பி விடப்படும் தண்ணீரை சேமிப்பதாகும்.
அணைக்கட்டு பகுதியில் சேய் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி 320 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[5] சேய் அணையின் கட்டுமானம் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு ரூ. 4.07 கோடி செலவில் நிறைவடைந்தது.[5][3][6]
உதய்பூர் நகரத்திலிருந்து உதய்பூர்-பிந்த்வாரா சாலையில் சாலை வழியாக சுமார் 90 கி.மீ தொலைவில் சேரி அணை உள்ளது.[7]
மேற்கோள்கள்
- ↑ Sehgal, K.K. (21 December 1960). Gazetteer of India Rajasthan Pali. Jaipur: Directorate of District Gazetteers. Retrieved 24 May 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Sei Diversion Dam D00864". Water Resources Information System of India. Retrieved 3 May 2019.
- ↑ 3.0 3.1 3.2 Sabarmati Basin. Government of India Ministry of Water Resources. 2014. Retrieved 3 May 2019.
- ↑ Jain, Sharad K; Agarwal, Pushpendra K; Singh, Vijay P (2007). Hydrology and Water Resources of India. Springer. ISBN 9781402051807.
- ↑ 5.0 5.1 Application Of GIUH And GIS Based Approach For Design Flood Estimation. National Institute of Hydrology. 1998.
- ↑ Major and Medium Irrigation Projects in India - Completed Projects Compiled Upto End of Ninth Plan Including Ongoing and New Projects of Tenth Plan. Central Water Commission. 2008.
- ↑ "Sei Dam reservoir and surrounding environs - keybiodiversityareas.org". www.keybiodiversityareas.org. Retrieved 2025-06-19.