செனபோன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 08:15, 1 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: வாழ்கை → வாழ்க்கை using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஏதென்சின் செனபோன்
கிரேக்க வரலாற்றாளர் ஏதென்சின் செனபோன்.
பிறப்புc. 430 கிமு
ஏதென்சு
இறப்பு354 கிமு (தோராய வயது. 76)
இனம்கிரேக்கர்
பணிவரலாற்றாளர், படைவீரர், கூலிப்படையாள்
பெற்றோர்கிரைல்லசு
பிள்ளைகள்கிரைல்லசு மற்றும் தியோடரசு]

செனபோன் (Xenophon) ஏதென்சில் கி.மு. 430 முதல் கி. மு. 354 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி, வரலாற்று வரைவாளர், போர் வீரர் மற்றும் சாக்ரடீஸின் மாணவர் ஆவார். இவர் சொல்லணிக் கலையில் தேர்ந்தவரும் துசிடிடீசுக்குப் பின் வந்த கிரேக்க வரலாற்றாளர்களில் குறிப்பிடத்தக்கவரும் ஆவார்.

பாரசிகத்தின் இளவரசர் சைரஸ் அதன் அரியணையைக் கைப்பற்ற பத்தாயிரம் கிரேக்கர்கள் அடங்கிய கூலிப்படையைத் திரட்டினார். அப்படையில் செனபோனும் இணைந்தார். பாரசிகத்தில் கிரேக்கப் படையினர் வெற்றியை எட்டும் நேரத்தில் இளவரசர் சைரஸ் கொல்லப்பட்டதால் போர் முயர்ச்சி தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் கிரேக்க தளபதிகள் வஞ்சகமாக கொல்லப்பட்டனர். தலைமை இல்லாத கிரேக்கப்படைக்கு செனபோன் தலைமை வகித்து பல இடற்பாடுகளைத் தாண்டி கிரேக்கப் படைகளை கிரேக்கத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.

செனபோன் தான் மீட்டுவந்த படையிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு ஏதென்சு வந்து சேர்ந்தார். அப்போது தன் ஆசான் சாக்கிரட்டீசு அநியாயமாக கொல்லப்பட்டதை அறிந்து வருந்தினார். ஏதென்சு மீது வெறுப்பு கொண்டார். அதனால் இவர் தன்னுடைய 30 ஆவது வயதில் எசுபார்த்தாவின் படையில் சேர்ந்தார்.

படைப்புகள்

1. அன்பாசிஸ்

இந்நூல் பாரசீக மன்னர் சைரசுக்கும் அவரது சகோதரர் அர்டக்செர்க்கசுக்கும் இடையே நடைபெற்ற போர் பற்றிய முழுமையான தொகுப்பு ஆகும். குறிப்பாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்களை வெற்றிகரமாக வழிநடத்தி எசுபார்த்தாவுவுக்கு அழைத்து வந்த நிகழ்வை எழுதியுள்ளார்.

2. ஹெல்லெனிகா

இந்நூல் பெலப்பொனீசியா போர் பற்றிய வரலாற்று நூல்.

3. மெமோரபிலியா

செனபோனுக்கும், சாக்ரடீஸுக்கும் இடையில் நடைபெற்ற வரலாற்று நூல் ஆகும்.

4. பங்குவாட்

செனபோனின் இளமைக்கால வரலாற்றை பற்றியது.

5. பொருளாதாரம்

வெற்றிகரமான வாழ்க்கை வாழ தேவையான குறிப்புகள் மற்றும் பொருள்களை பற்றிய தகவல்களை உள்ளடக்கியது.

6. சைரோபீடியா

பாரசீக மன்னர் மகா சைரசின் இளைமைக்கால கல்வி, வாழ்க்கைத்தொழில், நிர்வாகம் பற்றிய விவரங்களைக் கொண்டது

மேற்கோள்

  • க. வெங்கடேசன், வரலாற்று வரைவியல், வி.வி.பதிப்பகம்.
"https://tamilar.wiki/w/index.php?title=செனபோன்&oldid=368883" இலிருந்து மீள்விக்கப்பட்டது