சீன் கன்
| சீன் கன் | |
|---|---|
| பிறப்பு | மே 22, 1974 செயின்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா |
| கல்வி | டீபால் பல்கலைக்கழகம் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1995–இன்றுவரை |
| வாழ்க்கைத் துணை | நடாஷா ஹாலேவி (தி. 2019) |
| உறவினர்கள் |
|
| கையொப்பம் | |
சீன் கன் (ஆங்கிலம்: Sean Gunn) (பிறப்பு: மே 22, 1974) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களில் 'கிராக்லின்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[1] இவர் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் தம்பி மற்றும் பெரும்பாலும் அவர் இயக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சீன் கன் 22 மே 1974 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் ஆறு குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கன், நடிகரும் அரசியல் எழுத்தாளருமான மாட்கன், திரைக்கதை எழுத்தாளர் பிரையன்கன், தயாரிப்பாளரும் கைவினைஞர் என்டர்டெயின்மென்ட் முன்னாள் நிர்வாக துணைத் தலைவருமான பேட்ரிக் மற்றும் வேலைவாய்ப்பு வழக்கறிஞராக பணிபுரியும் சகோதரியான பெத் ஆகியோரின் சகோதரர் ஆவார்.[2][3][4][5][6]
இவரின் பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஆவார்கள். இவர் 2019 ஆம் நடிகை மற்றும் திருப்பப்பட இயக்குனருமான 'நடாஷா ஹாலேவி' என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[7]
மேற்கோள்கள்
- ↑ James Gunn in "James Gunn Reveals New Details on Guardians of the Galaxy". Pointless Podcast via ComingSoon.net. February 20, 2014. Archived from the original on March 11, 2016.
- ↑
- ↑ Gunn, James (July 5, 2015). "My brother Brian's dream about..." Twitter. Retrieved November 7, 2015.
- ↑ Patrick Gunn profile, qualiacapital.com; accessed December 4, 2014.
- ↑ Gunn, James (December 21, 2014). "My sister Beth gave me..." Twitter. Retrieved November 7, 2015.
- ↑ "Beth Gunn | Gunn Coble | California Employment Lawyer". Equal Pay | United States | Gunn Coble (in ஆங்கிலம்). Retrieved 2018-07-22.
- ↑