சிஸ்டைன்
|
| |||
| இனங்காட்டிகள் | |||
|---|---|---|---|
| 56-89-3 | |||
| ChEMBL | ChEMBL366563 | ||
| ChemSpider | 575 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} | ||
| |||
| UNII | 48TCX9A1VT | ||
| பண்புகள் | |||
| C6H12N2O4S2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 240.29 g·mol−1 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
சிஸ்டைன் (Cystine) என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப் பொருளாகும். சிஸ்டைன், இரு புரத மூலகூறுகளுக்கு இடையிலேயும், ஒரு புரதத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.[1][2][3]
சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட சிஸ்டீன் அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதிப் பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.
வேதி வினை: (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR
மேற்கோள்கள்
- ↑ Nelson, D. L.; Cox, M. M. (2000) Lehninger, Principles of Biochemistry. 3rd Ed. Worth Publishing: New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57259-153-6.
- ↑ "cystine". Encyclopædia Britannica. 2007. Encyclopædia Britannica Online. 27 July 2007
- ↑ Gortner, R. A.; Hoffman, W. F. (1925). "l-Cystine". Organic Syntheses 5: 39. http://www.orgsyn.org/demo.aspx?prep=10.15227/orgsyn.005.0039.

