கொவ்வை

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:49, 15 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கொவ்வை
கோவை
கோவைக்காய் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. grandis
இருசொற் பெயரீடு
Coccinia grandis
(L.) Voigt

கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.

இலைகள் - கொவ்வை தாவரம்.

இலக்கியத்தில் கோவை

இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார்.[1]

 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
 பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
 இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
 மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

உசாத்துணை

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா

மேற்கோள்கள்

  1. சி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. "தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை". Retrieved 2006-09-18.


"https://tamilar.wiki/w/index.php?title=கொவ்வை&oldid=343110" இலிருந்து மீள்விக்கப்பட்டது