இரும்பை

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 13:14, 24 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (தட்டுப்பிழைத்திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இரும்பை என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் விரான் (விராஅன்). இவன் இரவலர்க்குத் தேர் வழங்கும் வள்ளல்.

பரணர் - நற்றிணை 350 குறிப்பிடுகிறது.

தலைவியின் தோள் இரும்பை போல் அழகானது.
இங்குள்ள மக்கள் நெல் அறுக்கும்போது தண்ணுமைப் பறை முழக்குவார்களாம். அதைக் கேட்டு வயல்களில் மேயும் பறவைகள் பறந்தோடி அங்குள்ள மருத மரத்தில் குந்துமாம். அப்போது மருதப் பூங்கொத்துகள் சிதறுமாம்,

ஓரம்போகியார் - ஐங்குறுநூறு 58 குறிப்பிடுகிறது.

இங்குள்ள வயல்களில் நெல் மூங்கில் போல் உயர்ந்து வளருமாம். (இக் குறிப்பு மிகை என்றாலும் இது நெல்வளம் மிக்க ஊர் எனத் தெரியவருகிறது).
"https://tamilar.wiki/w/index.php?title=இரும்பை&oldid=282117" இலிருந்து மீள்விக்கப்பட்டது