ஆள்கூறுகள்: 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E / 11.5; 78.13

அத்தனூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kurumban பயனரால் செய்யப்பட்ட 20:02, 4 சனவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
Jump to navigation Jump to search
அத்தனூர்
அத்தனூர்
இருப்பிடம்: அத்தனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E / 11.5; 78.13
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை 9,014 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராசிபுரம் வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 7ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது[3]. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது.[4] இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது[5]

இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. [6]

அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், திருச்செங்கோட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=5599
  4. http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/
  5. http://www.maalaimalar.com/2011/02/05163646/athanur-amman-teple-rearrange.html
  6. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அத்தனூர்&oldid=203152" இலிருந்து மீள்விக்கப்பட்டது