அடைமொழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 11:12, 12 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''அடைமொழி''' என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும்.<ref>{{cite book | title=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அடைமொழி என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும்.[1]

வகைகள்

  1. இனமுள்ள அடைமொழி
  2. இனமில்லா அடைமொழி[2]

இனமுள்ள அடைமொழி

பல இனங்கள் உள்ள பொருளுக்கு அதன் இனம் பிரித்து அறிய உதவும் தனிச்சொல்லே இனமுள்ள அடைமொழி ஆகும்.

எடுத்துக்காட்டு:

தமிழ்ப்பாடநூல்

”பாடநூல்” என்பது தமிழ்ப்பாடநூல், ஆங்கிலப்பாடநூல், கணிதப்பாடநூல், அறிவியல் பாடநூல், சமூக அறிவியல் பாடநூல், கணிப்பொறியியல் பாடநூல் எனப் பல வகைகள் உள்ள ஒரு பொருளைக் குறிக்கும் சொல். இவற்றுள் தமிழ்ப் பாடத்துக்குரிய நூலை வகைப்பிரித்துக் காட்ட உதவும் வகையில் “தமிழ்” என்ற அடைமொழி இணைத்து “தமிழ்ப்பாடநூல்” என அமைகிறது. ”பாடநூல்” என்பதற்கு “தமிழ்” அடைமொழியாக வந்துள்ளது. இது இன அடைமொழியாகும்.

இனமில்லா அடைமொழி

ஒரு பொருளுக்குரிய இனமாக இல்லாமல் இருப்பினும் அப்பொருளின் சிறப்புக் கருதி வழங்கப்படும் அடைமொழியே இனமில்லா அடைமொழி ஆகும்.

எடுத்துக்காட்டு:

கருநிலவு

நிலவானது வெண்மையானது; கருமை அதன் இனமன்று. எனினும் நிலைவைச் சிறப்பித்துக் கூற கருநிலவு எனப்படுகிறது. ”கருமை” என்பது “நிலவின்” இனமல்ல. எனினும் கருநிலவு என்று அடைமொழியாக வந்துள்ளது. இது இனமில்லா அடைமொழி ஆகும்.[2]

மேற்கோள்

  1. ஏழாம்வகுப்பு,தமிழ்,மூன்றாம் பருவம். இலக்கணம்: தமிழ்நாடு பாடநூல் கழகம். 2014. pp. 18, 19.
  2. 2.0 2.1 "அடைமொழி".
"https://tamilar.wiki/w/index.php?title=அடைமொழி&oldid=102998" இலிருந்து மீள்விக்கப்பட்டது