வல்லினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "'''வல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''வல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள [[மெய்யெழுத்து]]களின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. [[மெல்லினம்]], [[இடையினம்]] என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], அதற்குப் பின்னர் எழுந்த [[நன்னூல்]] முதலிய தமிழ் இலக்கண நூல்களும், '''க், ச், ட், த், ப், ற்''' எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை ''வலி'', ''வன்மை'', ''வன்கணம்'' என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.<ref>இளவரசு, சோம., 2009, பக். 43.</ref> "வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய [[இளம்பூரணர்|இளம்பூரணரின்]] விளக்கம்.<ref>தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2006, பக். 16.</ref> |

<h1>மொழியியலும், வல்லினமும்</h1> |
|||
==ஒலிப்பிறப்பு== |
|||
தற்கால மொழியியலின்படி தமிழின் வல்லின எழுத்துகளில் "'''ற'''" தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் [[வெடிப்பொலி]]கள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. வாயறையின் ஓரிடத்தில் மூச்சுக்காற்று முழுவதும் தடை செய்யப்பட்டுப் பின்னர் திடீரென்று வெடிப்போடு வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே வெடிப்பொலிகள்.<ref>கருணாகரன், கி., ஜெயா, வ., 2007. பக். 23.</ref>[[ஒற்றெழுத்து|ஒற்றெழுத்தாக]] வரும்பொழுது "றகரம்" வெடிப்பொலியாக அமையும். [[இலங்கைத் தமிழ்|இலங்கைத் தமிழிலும்]], தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இரட்டிக்கும்போதும் "றகரம்" வெடிப்பொலியாக வருகின்றது. வல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு: |

{| class="wikitable" |
{| class="wikitable" |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
|} |
|} |
||
==வல்லொலி மெல்லொலி மாற்றம்== |
|||
வல்லின எழுத்துகளில் "றகரம்" தவிர்ந்தவை தமிழில் எல்லா இடங்களிலும் [[வல்லொலி]]யாக ஒலிக்கப்படுவது இல்லை. க், த், ப் என்பன, சொல்லுக்கு முதலில் வரும்போதும் (எகா: '''க'''டல், '''த'''ட்டு, '''ப'''த்து) [[இரட்டித்தல் (எழுத்திலக்கணம்)|இரட்டிக்கும்]] போதும் (எகா: பக்'''க'''ம், முத்'''த'''ம், அப்'''ப'''ம்) மட்டுமே இவை, வல்லொலிகளாக ஒலிக்கின்றன. "சகரம்" தற்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும்போது பெரும்பாலும் [[மெல்லொலி]]யாகவே (எகா: சட்டி (satti), செக்கு (sekku)) ஒலிக்கப்படுகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் [[பேச்சு வழக்கு|பேச்சு வழக்கில்]] சொல்லின் முதலில் வரும் "சகரம்" வல்லொலியாகவே (எகா: சட்டி (chatti), செக்கு (chekku)) ஒலிக்கப்படுகின்றது. இரட்டித்து வரும்போது சகரம் எப்போதும் வல்லொலியாகவே (எகா: பச்'''சை''', அச்'''ச'''ம்) ஒலிக்கப்படும். "டகர"மும், "றகர"மும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இரட்டிக்கும்போது வல்லொலிகளையே தருகின்றன. "றகரம்" எல்லா இடங்களிலும் வல்லொலியே. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பிற இடங்களில் வரும் க, ச, ட, த, ப என்னும் வல்லெழுத்துகளைத் தமிழில் மெல்லொலிகளாக (எகா: அ'''க'''ம், தங்'''க'''ம், பா'''ச'''ம், கொஞ்'''ச'''ம், பா'''ட'''ல், ஆண்'''ட'''வன், கா'''த'''ல், சொந்'''த'''ம், கோ'''ப'''ம், இன்'''ப'''ம்) ஒலிப்பது வழக்கம். |

07:04, 24 மே 2024 இல் கடைசித் திருத்தம்
வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.[1] "வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணரின் விளக்கம்.[2]
மொழியியலும், வல்லினமும்
ஒலிப்பிறப்பு
தற்கால மொழியியலின்படி தமிழின் வல்லின எழுத்துகளில் "ற" தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் வெடிப்பொலிகள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. வாயறையின் ஓரிடத்தில் மூச்சுக்காற்று முழுவதும் தடை செய்யப்பட்டுப் பின்னர் திடீரென்று வெடிப்போடு வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே வெடிப்பொலிகள்.[3]ஒற்றெழுத்தாக வரும்பொழுது "றகரம்" வெடிப்பொலியாக அமையும். இலங்கைத் தமிழிலும், தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இரட்டிக்கும்போதும் "றகரம்" வெடிப்பொலியாக வருகின்றது. வல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:
| எழுத்து | அதிர்வு | ஒலிப்பு முறை | ஒலிப்பிடம் |
|---|---|---|---|
| ககரம் | அதிர்விலா | வெடிப்பொலி | கடையண்ணம் |
| சகரம் | அதிர்விலா | வெடிப்பொலி | இடையண்ணம் |
| டகரம் | அதிர்விலா | வெடிப்பொலி | நாமடி |
| தகரம் | அதிர்விலா | வெடிப்பொலி | நாநுனி பல் |
| பகரம் | அதிர்விலா | வெடிப்பொலி | ஈரிதழ் |
| றகரம் (ஒற்று) | அதிர்விலா | வெடிப்பொலி | ஈரிதழ் |
| றகரம் (ஒற்றிலா) | அதிர்விலா | ஆடொலி/ உருளொலி | நாநுனி அண்பல் |
வல்லொலி மெல்லொலி மாற்றம்
வல்லின எழுத்துகளில் "றகரம்" தவிர்ந்தவை தமிழில் எல்லா இடங்களிலும் வல்லொலியாக ஒலிக்கப்படுவது இல்லை. க், த், ப் என்பன, சொல்லுக்கு முதலில் வரும்போதும் (எகா: கடல், தட்டு, பத்து) இரட்டிக்கும் போதும் (எகா: பக்கம், முத்தம், அப்பம்) மட்டுமே இவை, வல்லொலிகளாக ஒலிக்கின்றன. "சகரம்" தற்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும்போது பெரும்பாலும் மெல்லொலியாகவே (எகா: சட்டி (satti), செக்கு (sekku)) ஒலிக்கப்படுகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் பேச்சு வழக்கில் சொல்லின் முதலில் வரும் "சகரம்" வல்லொலியாகவே (எகா: சட்டி (chatti), செக்கு (chekku)) ஒலிக்கப்படுகின்றது. இரட்டித்து வரும்போது சகரம் எப்போதும் வல்லொலியாகவே (எகா: பச்சை, அச்சம்) ஒலிக்கப்படும். "டகர"மும், "றகர"மும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இரட்டிக்கும்போது வல்லொலிகளையே தருகின்றன. "றகரம்" எல்லா இடங்களிலும் வல்லொலியே. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பிற இடங்களில் வரும் க, ச, ட, த, ப என்னும் வல்லெழுத்துகளைத் தமிழில் மெல்லொலிகளாக (எகா: அகம், தங்கம், பாசம், கொஞ்சம், பாடல், ஆண்டவன், காதல், சொந்தம், கோபம், இன்பம்) ஒலிப்பது வழக்கம்.
"வல்லொலி மெல்லொலி மாற்றம்" எனப்படும் இது தமிழில் தொன்று தொட்டே இருந்து வரும் வழக்கம் என்பது கால்டுவெல்லின் கருத்து.[4] ஆனாலும், தொல்காப்பியத்தில் இது தொடர்பான குறிப்புகள் எதுவும் காணப்படாததாலும், இது போன்ற பல நுண்ணிய வேறுபாடுகளை எடுத்தாண்ட தொல்காப்பியர் இந்த விடயத்தைச் சொல்லாமல் விட்டிருப்பதாலும், தமிழில் மெல்லொலிகள் பிற்காலத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[5]
இன எழுத்துகள்
தமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துகள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துகள் ஆகின்றன.
குறிப்புகள்
உசாத்துணைகள்
- இளவரசு, சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2009.
- கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.
- கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், கோவிந்தன், கா., ரத்தினம், க. (தமிழாக்கம்), முல்லை நிலையம், சென்னை, 2004.
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2006.
- வரதராசன், மு., மொழிநூல், தாயகம் வெளியீடு, சென்னை, 2007 (முதற்பதிப்பு 1947).