எண்ணளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1
 
No edit summary
 
வரிசை 10: வரிசை 10:
ஒரு முடிவுறு கணங்களைப் பொறுத்தவரை எண்ணளவை என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எண்ணளவைக் கருத்துருவை முடிவிலி கணங்களுக்கு நீட்டிக்கும்போது குறிப்பிலா கணங்களை ஒப்பிடும்முறையை வரையறுத்தல் அவசியமாகிறது.

=== வரையறை 1 : | ''A'' | = | ''B'' | ===
== வரையறை 1 : | ''A'' | = | ''B'' | ==
:''A'' , ''B'' கணங்களுக்கிடையில், ''A'' இலிருந்து ''B'' க்கு வரையறுக்கப்பட்ட ஒரு [[இருவழிக்கோப்பு]] ([[உள்ளிடுகோப்பு|உள்ளிடு]] மற்றும் [[முழுக்கோப்பு|முழுக்கோப்பாக]] அமையும் ஒரு [[சார்பு]]) இருக்குமானால், அவ்விரு கணங்களின் எண்ணளவைகள் சமமானவையாக இருக்கும். அதாவது, | ''A'' | = | ''B'' |.

:எண்ணளவை சமமாகவுள்ள கணங்கள் ''≈'', ''~'' ஆகிய குறியீடுகளால் இணைக்கப்படுகின்றன:
:எண்ணளவை சமமாகவுள்ள கணங்கள் ''≈'', ''~'' ஆகிய குறியீடுகளால் இணைக்கப்படுகின்றன:
வரிசை 20: வரிசை 20:
:''f''(''n'') = 2''n'' என்ற சார்பு, '''N''' இலிருந்து ''E'' க்கு வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாக உள்ளதால் | ''E'' | = | ''N'' | ஆக இருக்கும்.
:''f''(''n'') = 2''n'' என்ற சார்பு, '''N''' இலிருந்து ''E'' க்கு வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாக உள்ளதால் | ''E'' | = | ''N'' | ஆக இருக்கும்.

=== வரையறை 2: | ''A'' | ≤ | ''B'' | ===
== வரையறை 2: | ''A'' | ≤ | ''B'' | ==
''A'' இலிருந்து ''B'' க்கு வரையறுக்கப்பட்ட ஒரு [[உள்ளிடுகோப்பு|உள்ளிடு சார்பு]] இருக்குமானால், ''A'' இன் எண்ணளவை ''B'' இன் எண்ணளவையை விடச் குறைந்ததாகவோ சமமானதாகவோ இருக்கும்.
''A'' இலிருந்து ''B'' க்கு வரையறுக்கப்பட்ட ஒரு [[உள்ளிடுகோப்பு|உள்ளிடு சார்பு]] இருக்குமானால், ''A'' இன் எண்ணளவை ''B'' இன் எண்ணளவையை விடச் குறைந்ததாகவோ சமமானதாகவோ இருக்கும்.
::| ''A'' | ≤ | ''B'' |
::| ''A'' | ≤ | ''B'' |

=== வரையறை 3: | ''A'' | < | ''B'' | ===
== வரையறை 3: | ''A'' | < | ''B'' | ==
''A'' இலிருந்து ''B'' க்கு வரையறுக்கப்பட்ட ஒரு [[உள்ளிடுகோப்பு|உள்ளிடு சார்பு]] இருந்து, இருவழிச் சார்பு இல்லாமல் இருந்தால் ''A'' இன் எண்ணளவை ''B'' இன் எண்ணளவையை விடக் கண்டிப்பாகக் குறைந்ததாக இருக்கும்.

::| ''A'' | < | ''B'' |
::| ''A'' | < | ''B'' |

12:38, 25 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

கணிதத்தில், ஒரு கணத்தின் எண்ணளவை (cardinality) என்பது அக்கணத்திலுள்ள உறுப்புக்களின் எண்ணிக்கையின் அளவாகும். எடுத்துக்காட்டாக கணம் A = {1,2,3} வில் மூன்று உறுப்புகள் உள்ளன. எனவே A வின் எண்ணளவை மூன்றாகும். இருவழிக்கோப்புகள், உள்ளிடுகோப்புகளைக் கொண்டு கணங்களை நேரிடையாக ஒப்பீடு செய்தல், முதலெண்களைப் பயன்படுத்தல் என இரு வழிகளில் எண்ணளவையானது அணுகப்படுகிறது.[1]

மற்ற அளவைகளோடு குழப்பம் ஏற்படாதவரை ஒரு கணத்தின் எண்ணளவையானது அக்கணத்தின் அளவு எனவும் அழைக்கப்படுகிறது.[2]

எண்ணளவையைக் குறிக்க |A|, card(A), #A, n(A) A போன்ற குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.

கணங்களை ஒப்பிடுதல்

படிமம்:Aplicación 2 inyectiva sobreyectiva04.svg
N இலிருந்து E க்கான இருவழிச் சார்பு. E ஆனது N இன் தகு உட்கணமாக இருப்பினும் இரண்டின் எண்ணளவைகளும் சமமாக உள்ளன.

ஒரு முடிவுறு கணங்களைப் பொறுத்தவரை எண்ணளவை என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எண்ணளவைக் கருத்துருவை முடிவிலி கணங்களுக்கு நீட்டிக்கும்போது குறிப்பிலா கணங்களை ஒப்பிடும்முறையை வரையறுத்தல் அவசியமாகிறது.

வரையறை 1 : | A | = | B |

A , B கணங்களுக்கிடையில், A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு இருவழிக்கோப்பு (உள்ளிடு மற்றும் முழுக்கோப்பாக அமையும் ஒரு சார்பு) இருக்குமானால், அவ்விரு கணங்களின் எண்ணளவைகள் சமமானவையாக இருக்கும். அதாவது, | A | = | B |.
எண்ணளவை சமமாகவுள்ள கணங்கள் , ~ ஆகிய குறியீடுகளால் இணைக்கப்படுகின்றன:
A≈B அல்லது A~B
எடுத்துக்காட்டு:
E = {0, 2, 4, 6, ...} - எதிர்மமில்லா இரட்டை எண்களின் கணம்.
N' = {0, 1, 2, 3, ...} - இயல் எண்களின் கணம்.
f(n) = 2n என்ற சார்பு, N இலிருந்து E க்கு வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாக உள்ளதால் | E | = | N | ஆக இருக்கும்.

வரையறை 2: | A | ≤ | B |

A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருக்குமானால், A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடச் குறைந்ததாகவோ சமமானதாகவோ இருக்கும்.

| A | ≤ | B |

வரையறை 3: | A | < | B |

A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருந்து, இருவழிச் சார்பு இல்லாமல் இருந்தால் A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடக் கண்டிப்பாகக் குறைந்ததாக இருக்கும்.

| A | < | B |
எடுத்துக்காட்டு:

N = இயல் எண்களின் கணம்.

R = மெய்யெண்களின் கணம்.
உள்ளடக்கல் கோப்பு, i : NR ஒரு உள்ளிடு சார்பாகும். ஆனால் NR வரையறுக்கப்பட்ட எந்தவொரு இருவழிச் சார்பும் கிடையாது என்பதால்
| N | < | R |
| A | ≤ | B | மற்றும் | B | ≤ | A | எனில் | A | = | B | (Cantor–Bernstein–Schroeder theorem).
தெரிவு அடிக்கோளானது (axiom of choice), A,B கணங்களுக்கு,| A | ≤ | B | அல்லது | B | ≤ | A | ஆக இருக்கும் என்ற கூற்றுக்குச் சமானமானதாகும்.[3][4]

எடுத்துக்காட்டுகளும் பண்புகளும்

  • X = {a, b, c}, Y = {ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா} கணங்களுக்கிடையில் { (a, ஆப்பிள்), (b,ஆரஞ்சு), (c, கொய்யா)} என்ற இருவழிச் சார்பு அமைந்துள்ளதால் | X | = | Y | = 3.
  • | X | < | Y |, எனில் | X | = | Z | மற்றும் ZY என்றவாறு Z என்ற கணம் இருக்கும்.
  • | X | ≤ | Y | மற்றும் | Y | ≤ | X | எனில் | X | = | Y |. இக்கூற்று முடிவிலி கணங்களுக்கும் பொருந்தும்.

ஒன்றிப்பும் வெட்டும்

A , B என்பவை சேர்ப்பில்லா கணங்கள் எனில்:

இதிலிருந்து ஒன்றிப்பு கணங்கள் மற்றும் வெட்டு கணங்களின் எண்ணளவைகள் கீழ்வருமாறு தொடர்புபடுத்தப்படுகின்றன:[5]

மேற்கோள்கள்

  1. Weisstein, Eric W., "Cardinal Number", MathWorld.
  2. வடிவவியலில் நீளம், பரப்பளவு போன்றவை – முடிவுறு நீளமுள்ள கோடானது புள்ளிகளாலான முடிவிலி எண்ணளவை கொண்ட கணமாகும்.
  3. Friedrich M. Hartogs (1915), Felix Klein; Walther von Dyck; டேவிடு இல்பேர்ட்டு; Otto Blumenthal (eds.), "Über das Problem der Wohlordnung", Mathematische Annalen, 76 (4), Leipzig: B. G. Teubner: 438–443, doi:10.1007/bf01458215, ISSN 0025-5831
  4. Felix Hausdorff (2002), Egbert Brieskorn; Srishti D. Chatterji; et al. (eds.), Grundzüge der Mengenlehre (1. ed.), Berlin/Heidelberg: Springer, p. 587, ISBN 3-540-42224-2 - Original edition (1914)
  5. Applied Abstract Algebra, K.H. Kim, F.W. Roush, Ellis Horwood Series, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85312-612-7 (student edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85312-563-5 (library edition)
"https://tamilar.wiki/w/index.php?title=எண்ணளவை&oldid=295789" இலிருந்து மீள்விக்கப்பட்டது