மேச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>SeNgaiHemNath சி →கல்வி |
imported>SeNgaiHemNath |
||
| வரிசை 62: | வரிசை 62: | ||
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும் ஒரு சிலர் செங்கல் சூளைகளையும் நம்பியுள்ளனர். |
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும் ஒரு சிலர் செங்கல் சூளைகளையும் நம்பியுள்ளனர். |
||
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற |
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. |
||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
09:30, 20 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்
| மேச்சேரி | |||||
| — பேரூராட்சி — | |||||
| ஆள்கூறு | 11°51′03″N 77°57′23″E / 11.85083°N 77.95639°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சேலம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||
| பேரூராட்சி தலைவர் | ஜெ.குமார் | ||||
| மக்கள் தொகை | 21,020 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
- மேச்சேரி (ஆங்கிலம்:Mecheri), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பெயர் காரணம்
கன்று கறவைகளை மேய்க்கும் இடம் என்று பொருள் தரும் 'மேய்ச்சல் ஏரி' என்ற பெயரே பின்னாளில் மருவி 'மேச்சேரி' என்றானது.
அக்காலத்தில் இவ்விடம் ஓர் ஏரியாக இருந்துள்ளது. இந்த ஏரியில் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்து வந்ததால் இவ்விடம் மேச்சேரி என்றானது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். மேச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. மேச்சேரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஊரின் சிறப்புகள்
- மேச்சேரி பத்ரகாளி அம்மன் இவ்வூரில் உள்ள மிக பெரிய கோவில் ஆகும். இங்கு அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றன . குறிப்பாக வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி 29 மற்றும் 30 நாட்களில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
- மேச்சேரி மாடு ஆடுகள் சந்தை மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். இது வாரத்தின் ஒரு முறை புதன்கிழமைகளில் கூடுகின்றன.
- மேச்சேரி ஆடுகள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆடு வகைகள் ஆகும். இதன் சுவை மற்ற ஆடுகளை காட்டிலும் சற்றே சுவை மிகுந்தது.
- இந்த வகை ஆடுகளுக்கென்று தனி ஆராய்ச்சிநிலையம் மேச்சேரி அருகே பொட்டனேரி என்ற ஊரில் அமைந்துள்ளது.
கல்வி
மேச்சேரியின் அருகே 'தி காவேரி பொறியியல் கல்லூரி' அமைந்துள்ளது . மேலும் அமரம் அருகே மகளிர் கலை கல்லூரி விரைவில் அமைய உள்ளது.
இவ்வூரில் இருந்து 5.9கி.மீ தொலைவில் உள்ள சாத்தப்பாடி என்ற ஊரில் பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளன.
போக்குவரத்து
இங்கிருந்து மேட்டூர் 21கி.மீ தொலைவிலும், சேலம் 30கி.மீ தொலைவிலும், தர்மபுரி 42கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மேலும் அருகில் உள்ள சிறு நகரங்களான ஏரியூர்,பென்னாகரம்,ஒகேனக்கல் போன்ற ஊர்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.
தொழில் மற்றும் விவசாயம்
மேச்சேரியின் அருகே jsw என்ற மிகபெரிய இரும்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.
மேலும் இந்த ஊரின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையும் ஒரு சிலர் செங்கல் சூளைகளையும் நம்பியுள்ளனர்.
இங்கு அதிகம் கேழ்வரகு, சோளம், கம்பு, வேர்க்கடலைபோன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)