ஓஷோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alangar Manickam
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{wikify}}
{{Infobox artist
{{Infobox artist
| name = ரஜினீஷ்
| name = ரஜினீஷ்
வரிசை 109: வரிசை 108:
<references/>
<references/>
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
<!--========================({{No More Links}})============================
<!--==({{No More Links}})==
| PLEASE BE CAUTIOUS IN ADDING MORE LINKS TO THIS ARTICLE. WIKIPEDIA |
| PLEASE BE CAUTIOUS IN ADDING MORE LINKS TO THIS ARTICLE. WIKIPEDIA |
| IS NOT A COLLECTION OF LINKS NOR SHOULD IT BE USED FOR ADVERTISING. |
| IS NOT A COLLECTION OF LINKS NOR SHOULD IT BE USED FOR ADVERTISING. |
வரிசை 120: வரிசை 119:
| to the relevant category at the Open Directory Project (dmoz.org) |
| to the relevant category at the Open Directory Project (dmoz.org) |
| and link back to that category using the {{dmoz}} template. |
| and link back to that category using the {{dmoz}} template. |
===({{No More Links}})=========-->
==({{No More Links}})==-->
{{Sister project links| wikt = no| b = no| q = Osho | s = Osho | commons = Osho | n = no| v = no| species = no| display = Osho | author = no }}
{{Sister project links| wikt = no| b = no| q = Osho | s = Osho | commons = Osho | n = no| v = no| species = no| display = Osho | author = no }}
*[http://www.osho.com/ Osho International Foundation website]
*[http://www.osho.com/ Osho International Foundation website]

10:24, 1 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

ரஜினீஷ்
பிறப்புபகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் சந்திர மோகன் ஜெயின்
11 December 1931 (1931-12-11)
குச்வாடா, பரேலி தாலுக்கா, ரெய்சன் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
இறப்பு19 January 1990 (1990-01-20) (aged 58)
புனே, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஆன்மிகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆன்மிக பேச்சாளர், தியான குரு
அரசியல் இயக்கம்Jivan Jagruti Andolan; புது சந்நியாசம்

ஓஷோ ( பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் சந்திர மோகன் ஜெயின் ) 11 டிசம்பர் 1931 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

ஓஷோ-பெயர்க்காரணம்

வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால், அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே, 'ஓஷோ' என்ற சொல்லை உருவாக்கியதாக ஓஷோ கூறுகிறார். கீழைநாடுகளில் இதன் பொருள் 'வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்' என்பதாகும். (ஓஷோ பற்றிய பல புத்தகங்களிலும் கண்ணதாசன் பதிப்பகம் முகப்பில் வெளியிடுகின்ற முன்பக்க உரை)

கல்வி

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்.

பம்பாய் வருடங்கள்

1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.

ரஜனீஷ்புரம்

தரிசு நிலமாக பாழடைந்த மத்திய ஓரேகானின் பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனுக்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.

கம்யூன் அழிக்கப்படுகிறது

1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

அக்டோபர் 28 - எந்தவித கைதி ஆணையின்றி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர்.

அங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உலக சுற்றுப் பயணம்

1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.

பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.

இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.

21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.

ஓஷோ மரணம்

1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.[1][2] ஓஷோவின் சமாதி மீது பொறிக்கப்பட்ட பொன்வரிகள்: 'ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை. பூமி எனும் கிரகத்தில் அவர் பார்வையிட்ட காலம் டிசம்பர் 11,1931- ஜனவரி 19,1990 [3]

சொற்பொழிவுகள்

ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர். இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.

ஓஷோ அவர்களின் "பத்து கட்டளைகள்"

(அவரது ஆரம்ப காலத்தில் "ஆசார்யா ராஜ்னீஷ்" என அழைக்கப்பட்டபோது, ஒரு செய்தியாளர் இவரிடம் "உங்கள் பத்து கட்டளைகள் என்ன?" என்று கேட்டார். அதற்கு ராஜ்னீஷ், "நான் எந்தவொரு கட்டளைக்கும் எதிரானவன், ஆனால் சிரிப்புக்காக சில விஷயங்களைச் சொல்கிறேன்" என கூறி பின்வருமாறு பதிலளித்தார்.)

  • உன் உள்ளத்திலிருந்து எழாமல் மற்றவர் கூறிய எந்தக் கட்டளையும் பின்பற்றாதே.
  • உயிரைவிட வேறு எந்த கடவுளும் இல்லை.
  • உண்மை உன் உள்ளேயே இருக்கிறது, அதை வெளியே தேடாதே.
  • அன்பே பிரார்த்தனை.
  • ஒன்றுமில்லாத நிலைதான் உண்மையை அடையும் கதவாகும். அந்த ஒன்றுமில்லாத நிலைதான் வழியும், இலக்கும், சாதனையும் ஆகும்.
  • வாழ்க்கை இப்போது, இங்கே தான்.
  • விழித்திருந்தே வாழ்.
  • நீந்தாதே – மிதந்துக்கொள்.
  • ஒவ்வொரு தருணத்திலும் மரித்துவிடு, புதியவனாக ஒவ்வொரு தருணத்திலும் பிறக்க.
  • தேடாதே. இருப்பது தான் உண்மை. நின்று காண்.

இவை அனைத்திலும், ராஜ்னீஷ் 3, 7, 9 மற்றும் 10 ஆகிய எண்ணங்களைத் தனிப்பட்ட முறையில் முக்கியமாகக் குறித்தார். இவரது இயக்கத்தில் இந்தக் கருத்துகள் முக்கியமான வழிகாட்டிகளாக தொடர்ந்து காணப்பட்டுள்ளன.

ஓஷோ பற்றி உருவான திரைப்படங்கள்

1974 – ராஜ்னீஷ் அவர்களைப் பற்றி முதல் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. தெற்காசிய மதங்களை ஆராயும் நிகழ்ச்சி என்ற தொடரின் 13வது பகுதி “ஒரு இன்றைய குரு: ராஜ்னீஷ்” என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டது.

1978 – இரண்டாவது ஆவணப்படம் “பகவான்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

1979 – ஜெர்மனியை சேர்ந்த இயக்குநர் பூணா ஆசிரமத்திற்கு சென்று “பூணா ஆசிரமம்: பகவானின் முயற்சி” என்ற ஆவணப்படம் எடுத்து வெளியிட்டார்.

1981 – “உலகம் நம்மைச் சுற்றி” என்ற தொடரில் “விட்டேோடிய கடவுள்” என்ற பகுதி வெளியானது.

1985 (நவம்பர் 3) – ஒரு பிரபல அமெரிக்க செய்தி நிகழ்ச்சியில் ஒரிகன் மாநிலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி பகுதி ஒளிபரப்பப்பட்டது.

1987 – “பயம் தான் நாயகன்” என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

1989 – ஆஸ்திரேலிய இயக்குநர் “ராஜ்னீஷ்: ஆன்மிக அச்சுறுத்தல்” என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார்.

1989 – இங்கிலாந்தில் “பகவான் ஸ்ரீ ராஜ்னீஷ்: கடவுள் ஆகிய மனிதர்” என்ற பகுதியுடன் ஒரு தொடர் வெளியானது.

2002 – “உயிரியல் சோதனைகள்” என்ற தொடரில், 1984ல் நடந்த விஷ பரவலுக்கு காரணம் என்ன என்பதை ஆராயும் பகுதி ஒளிபரப்பப்பட்டது.

2010 – “குரு – பகவான், அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலர்” என்ற தலைப்பில் ஒரு சுவிட்சர்லாந்து ஆவணப்படம் வெளியானது.

2012 – “ராஜ்னீஷ்புரம்” என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

2016 – “மீறலுள்ள மலர்” என்ற இந்திய திரைப்படம், ராஜ்னீஷ் அவர்களின் சிறுவயது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

2018 – “காட்டுக்குள்ளே காட்டுக்காரன்” என்ற தொடர், ராஜ்னீஷ்புரம் மற்றும் அதனைச் சுற்றிய விவாதங்களைப் பற்றியது.

2023 – “அன்பின் இரகசியங்கள்” என்ற இணையத் தொடர் வெளியானது.

மேற்கோள்கள்

  1. ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை
  2. Who Killed Osho?: An Interview with Author Abhay Vaidya
  3. 'ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை'- கண்ணதாசன் பதிப்பகம்

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=ஓஷோ&oldid=316155" இலிருந்து மீள்விக்கப்பட்டது